தேர்தல் தினமான இன்று சனிக்கிழமை காலையில் இருந்து நண்பகல் வரை இடம்பெற்ற தேர்தல் தொடர்பான வன்முறைகளில் ஏறாவூர் நகர பிரதேசத்தில் மூவர் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் நகர சபைக்காக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் இருவரும் மேலும் ஒரு ஆதரவாளரும் தாக்கப்பட்டு ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற இம்மூன்று தாக்குதல்களும் சனிக்கிழமை அதிகாலைக்கும் நண்பகலுக்கும் இடையில் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.