• பொதி அஞ்சலில் அனுப்பப்படவிருந்த புலிக்குட்டியொன்றை பொலிஸ் நாய் கண்டுபிடித்தது.

• மெக்ஸிக்கோவின் ஜலிஸ்க்கோ நகரில் புலிக்குட்டி அடங்கிய பொதி விமானம் மூலம் அனுப்பப்படவிருந்தது.

• மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருந்த அந்தக் குட்டியின் உடல் நலம் சற்றுப் பாதிக்கப்பட்டிருந்தது.

• இதையடுத்து அது கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

• இதை அனுப்பியவர்கள் அல்லது பெறவிருந்தவர்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

• இதைத் தனது மோப்ப சக்தியால் கண்டுபிடித்த நாய்க்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.