உள்ளூராட்சி மன்ற தேர்தல் காரணமாக தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்கா இன்று தொடக்கம் எதிர் வரும் ஞாயற்று கிழமை வரை இரவு நேரங்களில் மூடப்படும் என தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேர்தல் பணியில் தேசிய விலங்கியல் பூங்கா அதிகாரிகள் ஈடுபடவுள்ளமையினால் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் காலை 8.30 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.