பூமியை நோக்கி அதிவேகத்தில் பாய்ந்து வரும் இராட்சத விண்கல்!!!

Published By: Digital Desk 7

09 Feb, 2018 | 04:17 PM
image

விண்வெளியில் இருந்து அதிவேகத்தில் பாய்ந்து வரும் விண்கல் நாளை பூமியை கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்வெளியில் கோடிக்கணக்கான விண்கற்கள் சுற்றி வருகின்றன. ஆனால் சில நேரங்களில் இந்த கற்கள் பூமியின் புவிஈர்ப்பு பாதைக்குள் நுழைந்து விடுகின்றன. அந்த கற்கள் நேரடியாக பூமியில் வந்து விழுந்தால் பெரும் ஆபத்து ஏற்படும்.

ஆனாலும் பூமிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இயற்கை சில பாதுகாப்புகளை அளித்துள்ளது. புவி ஈர்ப்பு விசைக்குள் அந்த கற்கள் நுழையும்போது காற்றில் ஏற்படும் உராய்வு காரணமாக கற்களில் தீப்பிடித்துக்கொள்ளும். இதனால் பூமிக்கு வருவதற்கு முன்பாகவே எரிந்து சாம்பலாகிவிடும்.

இதன் காரணமாகத்தான் பூமிக்கு விண்கற்களால் ஆபத்து ஏற்படுவதில்லை. ஆனாலும் கூட சில கற்கள் முழுமையாக எரியாமல் பூமியில் விழுந்ததும்  உண்டு. அவற்றால் சிறு சிறு பாதிப்புகள் மட்டுமே இதுவரை ஏற்பட்டுள்ளன.

இந் நிலையில் பூமியை நோக்கி 40 மீட்டர் நீளம் கொண்ட ராட்சத கல் ஒன்று தற்போது அதிவேகமாக வந்து கொண்டிருக்கிறது. 2018சி.பி. என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கல் நாளை பூமியில் இருந்து 64,000 கிலோ மீட்டர் தூரத்தில் கடந்து செல்கிறது.

ஆனாலும் பூமியின் புவிஈர்ப்பு விசைக்கு அப்பால் அது கடந்து செல்வதால் அது பூமியை நோக்கி வராது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆபத்தும் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இதேபோன்று ஒரு கல் பூமி அருகே கடந்து சென்றது. ஒரே வாரத்தில் இப்போது 2ஆவது கல் வருவது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right