• தொடர்ச்சியாக பாலுக்காக அழுத ஒரு வயதுக் குழந்தையை தாய் கழுத்தறுத்துக் கொலை செய்தார்.

• மத்திய பிரதேசத்தின் தார் என்ற கிராமத்தில் இச்சம்பவம் நேற்று (8) இடம்பெற்றது.

• குழந்தையின் அழுகுரல் திடீரென நின்றதால் அயலவர்கள் சந்தேகம் கொண்டனர்.

• சிறிது நேரத்தில் வீட்டைப் பூட்டிக்கொண்டு தாய் தனியே வெளியேறவே அயலவர்களின் சந்தேகம் வலுத்தது.

• தாயின் உறவினரொருவருடன் சேர்ந்து அயலவர்கள் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

• அங்கே குழந்தை இரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

• அவர்கள் அளித்த தகவலின் பேரில் தாய் கைது செய்யப்பட்டார்.

• விசாரணையில் குழந்தையின் குரல்வளையை அரிவாளால் அறுத்ததாக தாய் ஒப்புக்கொண்டார்.