வெலிமடை - புகுல்பொல பகுதியில் இன்று அதிகாலை சுமார் 264 கிலோ கிராம் கழிவு தேயிலை தூளுடன்  18 வயதுடைய இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கழிவு தேயிலை தூளை கெப் ரக வாகனம் ஒன்றில் அனுமதி பத்திரம் இல்லாமல் பதுளை, வெலிமடை பிரதான வீதியில் அட்டம்பிட்டிய பகுதியிலிருந்து வெலிமடை பகுதிக்கு கொண்டு செல்லும் போது பொலிஸாரினால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டதோடு அவரிடமிருந்த கழிவுத் தேயிலையும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கழிவு தேயிலை தூளையும், வாகனத்தையும், சந்தேக நபரையும் வெலிமடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞரை வெலிமடை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக வெலிமடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.