நாளை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் நுவரெலியா காமினி சிங்கள வித்தியாலயத்திலிருந்து வாக்குசாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் 306 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 56,2025 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா மாநகர சபை,  தலவாக்கலை லிந்துலை மற்றும், அட்டன், டிக்கோயா ஆகிய நகர சபைகளுக்கும், வலப்பனை, ஹங்குரன்கெத்த, நுவரெலியா, அம்பகமுவ, கொத்மலை மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட கொட்டகலை, அக்கரபத்தனை, நோர்வூட், மஸ்கெலியா ஆகிய பிரதேச சபைகளுக்குமான 504 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். மேலும் 490 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்களிப்பு நிலையங்களில் 7,479 பேர் கடமையாற்றவுள்ளதோடு, பாதுகாப்புக்காக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸாருமாக 1572 பேர் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.