கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து விண்ணிற்கு அனுப்பப்பட்ட கார் பாதை மாறியது!!!

Published By: Digital Desk 7

09 Feb, 2018 | 12:15 PM
image

அமெரிக்காவில் இருந்து பால்கன் ஹெவி ரொக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட "டெஸ்லா" கார் அதன் பாதையில் இருந்து ஆஸ்டீராய்டு பெல்ட் பகுதிக்கு சென்று கொண்டிருக்கிறது என எலோன் மஸ்க் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

அமெரிக்காவில் புளோரிடா மாகாணம் கேப் கேனவரலில் அமைந்து உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘பால்கன் ஹெவி’ ரொக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.

குறித்த ரொக்கெட் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலோன் மஸ்க்குக்கு சொந்தமான சிவப்பு நிற டெஸ்லா காரை சுமந்து சென்றது குறிப்பிடத்தக்கது. 

குறித்த கார் செவ்வாய் மற்றும் பூமிக்கு இடையேயான சுற்றுப்பாதையில் சுற்றி வரும் வகையில் திட்டமிடப்பட்டு இருந்தது. 6 மாதங்களில் செவ்வாய்க்கு அருகே செல்லும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அதிக உந்து சக்தி காரணமாக அந்த கார் நிர்ணயிக்கப்பட்டு இருந்த தடத்தை கடந்து அதிக தூரம் சென்று விட்டது. செவ்வாய் சுற்றுவட்டப் பாதைக்கு அப்பால் சென்ற அந்த கார் தற்போது விண்வெளியில் மிகவும் தூரமான ஆஸ்டீராய்ட் பெல்ட் பகுதிக்கு சென்று கொண்டு இருக்கிறது என எலோன் மஸ்க் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26