உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல்   நாளை சனிக்­கி­ழமை காலை 7 மணி­முதல்  மாலை 4 மணி­வரை நடை­பெ­ற­வுள்­ளது.  இந்­நி­லையில் இம்­முறை உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல்  புதிய முறையில் நடை­பெ­ற­வுள்­ளதால் தேர்­தலில் எவ்­வாறு வாக்­க­ளிப்­பது என்ற தெளிவை வாக்­கா­ளர்கள் பெற்­றுக்­கொள்­ள­ வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். 

கடந்த காலங்­களில் தேர்தல் 

செய­ல­கமும்  சிவில் நிறு­வ­னங்­களும் ஊடக  நிறு­வ­னங்­களும்  புதிய தேர்தல் முறை­மையில் வாக்­க­ளிப்­பது எவ்­வாறு என்ற தெளி­வு­ப­டுத்­தலை போது­மான அளவு  வழங்­கி­யி­ருந்­தன. 

எவ்­வா­றெ­னினும்  வாக்­கா­ளர்கள்  இது­தொ­டர்பில் ஒரு சரி­யான தெளிவைப் பெற்­றுக்­கொள்­வது அவ­சி­ய­மாகும். இம்­முறை  உள்­ளூ­ராட்சி தேர்­த­லா­னது   வட்­டார மற்றும்   விகி­தா­சார  முறை­மை­களைக் கொண்ட கலப்பு முறை­மையில்  நடை­பெ­ற­வுள்­ளது. 

வட்­டார முறை­மையில் 60 வீத­மான உறுப்­பி­னர்­களும், விகி­தா­சார முறையில் 40 வீத­மான உறுப்­பி­னர்­களும் இந்தத் தேர்தல் மூலம்  உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளுக்கு  தெரி­வு­செய்­யப்­ப­ட­வுள்­ளனர். 

இம்­முறை   புதிய தேர்தல் முறை­மையில் விருப்பு வாக்கு முறைமை    உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை. மாறாக   வாக்­கா­ளர்கள் வாக்­க­ளிப்பு நிலை­யத்தில்   வழங்­கப்­படும் வாக்­குச்­சீட்டில்   கட்­சி­களின் பெயர்­களும் சுயேச்­சைக்­கு­ழுக்­களின் இலக்­கங்­களும்  அதன் சின்­னங்­களும்  வாக்­கா­ளர்கள்  வாக்­க­ளிப்­ப­தற்­கான இடை­வெ­ளியும் காணப்­படும். 

வாக்கு சீட்டைப் பெற்­றுக்­கொள்ளும் வாக்­கா­ளர்கள்  தமக்கு பிடித்த கட்சி,  அல்­லது சுயேச்­சைக்­கு­ழுக்­களின் சின்­னங்­க­ளுக்கு  நேராக  வழங்­கப்­பட்­டுள்ள இடை­வெ­ளியில்  தமது புள்ளடியை இட்டு  வாக்களிக்க முடியும்.  தமது வாக்கை புள்ளடிமூலம் இட்டபின்னர் வாக்காளர்கள்  வாக்குச்சீட்டை மடித்து வாக்குச்சீட்டை   வைக்கப்பட்டுள்ள  பெட்டிகளில் போடவேண்டும்.