உள்ளுராட்சிமன்ற தேர்தல் வாக்களிப்பிற்கான வாக்காளர் அட்டைகள் மற்றும் வாக்குப்பெட்டிகளை விநியோகிக்கும் பணிகள் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகியதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்திற்கு பொறுப்பாகவுள்ள சிரேஷ்ட வாக்கு நிலைய பொறுப்பாளர்கள் இன்று நண்பகல் அளவில் வாக்களிப்பு நிலையங்களுக்கு சமூகமளிக்க வேண்டும்.

340 உள்ளுராட்சி மன்றங்களுக்கு 8325 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான வாக்களிப்பு நாளை காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

13374 வாக்களிப்பு நிலையங்கள் இதற்கென தயார் செய்யப்பட்டுள்ளன. ஒரு கோடியே 57 இலட்சத்து 60 ஆயிரத்து 50 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.