உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு இடம்பெறும் நிலையங்களில் கையடக்கத்தொலைபேசிப் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்லுக்கான வாக்களிப்பு இடம்பெறும் பகுதியில் கையடக்கத்தொலைபேசியை பயன்படுத்தல் , காணொளி எடுத்தல் , புகைப்படம் எடுத்தல், புகைத்தல் மதுபானம், அருந்துதல் போன்ற செயல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.