வவுனியா - வேப்பங்குளம் பகுதியில் வெளிநாட்டிலிருந்து வந்து நான்கு தினங்களில்  இன்று பிற்பகல் இளைஞர் ஒருவர்  தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நான்கு தினங்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பிய வவுனியா - வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த 30 வயதான மயூரன் என்ற இளைஞரே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞர் உக்கிளாங்குளம் பகுதியிலுள்ள பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளதாகவும் அப் பெண்ணிற்கு அரச வேலை கிடைத்துள்ளதுடன் குறித்த இளைஞனை கைவிட்டுள்ளதாகவும் இதனாலே மனம் உடைந்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அறையில் தூங்கிக் கொண்டிருந்த தாயார் வெளியே வந்தபோது  மகன் தூக்கில் தொங்கிய படி இருந்ததைக் கண்டு அலறியுள்ளார். 

தாயின் அலறல் சத்தத்தைக் கேட்டு வந்த அயலவர்களின் உதவியோடு வவனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோதும் குறித்த இளைஞன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.