உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு தேசிய அடையாள அட்டை விநியோகிக்கும் ஒரு நாள் சேவை நாளை  நள்ளிரவு 12 மணி வரை முன்னெடுக்கப்போவதாக ஆட்பதிவு ஆணையாளர் வியானி குணதிலக தெரிவித்தார்.

பொதுவான நாட்களில் ஒருநாள் சேவையின் கீழ் 1,000 அடையாள அட்டைகள் வரை விநியோகிக்கப்படும் என்றும் உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு இதனை 2,000 வரை அதிகரிக்க இருப்பதாகவும் குணதிலக மேலும் தெரிவித்தார்.

இந் நிலையில் தேர்தலில் வாக்களிப்பதற்கு அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு தேர்தலுக்கு முன்னர் ஒருநாள் சேவையினூடாக வாக்காளர்களுக்கு துரிதமாக அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுத்திருப்பதாக ஆணையாளர் குறிப்பிட்டார்.

இதற்காக ஆட்பதிவு திணைக்களம் நள்ளிரவு 12 மணி வரை திறந்திருக்கும். நள்ளிரவு 12 மணி வரை விண்ணப்பங்கள் ஏற்கப்படும் எனவும் ஆணையாளர் குறிப்பிட்டார். ஒருநாள் சேவையினூடாக மாத்திரமன்றி சாதாரண சேவையின் கீழ் தினமும் 2,500 முதல் 3,000 வரை அடையாள அட்டைகள் தபால் சேவையினூடாக விநியோகிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்படுகிறது.