நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடோல்கெலே பகுதியில் வைத்து சிம்பாப்வே பிரஜையொருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குடிவரவு குடியகல்வு சட்டவிதிகளுக்கு மாறாக விசா அனுமதியின்றி தங்கியிருந்த சிம்பாப்வே பிரஜையே இவ்வாறு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் 27 வயதுடையவரெனவும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.