கூட்டுப் பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட நான்கு பேருக்கு 20 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அரலகன்வில பகுதியில் 2004ஆம் ஆண்டு பெண் ஒருவர் நான்கு பேரால் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டார். இது குறித்த வழக்கு விசாரணைகள் அண்மையில் நிறைவுற்றன.

இவ்வழக்கில் சந்தேக நபர்களாகக் கருதப்பட்டவர்கள் நீதிபதியால் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர். இதையடுத்து, நான்கு பேருக்கும் இருபது ஆண்டு கால கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், குற்றவாளிகள் நால்வரும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தலா இரண்டு இலட்ச ரூபா அபராதம் செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.