பிரபல பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பாக விளக்கமளிக்க முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்ரமரட்ன மற்றும் முன்னாள் உதவி பொலிஸ் மா அதிபர் ப்ரசன்ன நாணயக்கார ஆகியோருக்கு அழைப்பாணை அனுப்பும் முயற்சியில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

லசந்த விக்மரதுங்க படுகொலை செய்யப்பட்ட காலப் பகுதியில், இவ்விருவருமே கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பு வகித்திருந்தனர்.

லசந்தவின் கொலை தொடர்பான முக்கிய தடயங்களைத் தடுத்து வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்களிடமிருந்து விளக்கங்கள் பெறப்படவுள்ளது.

ஏற்கனவே, மேற்படி கொலைச் சம்பவம் குறித்த விசாரணைக்காக இவ்விருவரும் மற்றொரு உயரதிகாரியும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்களாக குற்றப் புலனாய்வுப் பொலிஸார் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் மனு அளித்திருந்தனர்.

அதன் பேரில், இவர்கள் மூவருடைய கடவுச் சீட்டுக்களையும் நீதிமன்றம் பறிமுதல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.