நாட்டில் நவீன வழிமுறைகளுடன் சரும சிகிச்சைகளுக்கு பெயர் பெற்று விளங்குகின்ற வர்த்தக நாமங்களுள் ஒன்றாகத் திகழ்கின்ற LUSH, தனது வர்த்தகநாமத் தூதுவராக மிஸ் ஸ்ரீ லங்கா -2014 பட்டத்தை வென்ற சுலக்ஷி ரணதுங்கவை நியமித்துள்ளது. 

‘அழகு,நேர்த்தி மற்றும் தன்னம்பிக்கை’ என்ற தனது மகுட வாசகத்தைக் கொண்டுள்ள இந்த விசேட சிகிச்சை நிலையம்,மிஸ் ஸ்ரீ லங்கா- 2014 சுலக்ஷி ரணதுங்கவை  தனது வர்த்தகநாமத் தூதுவராக நியமிக்கின்றமை தொடர்பான நிகழ்வில்,LUSH இன் முகாமைத்துவப் பணிப்பாளரான ஷேரோமி சமரதிவாகர மற்றும் பலபிரபலங்கள்,பிரமுகர்கள் கலந்துசிறப்பித்தனர்.      

சருமம் தொடர்பான அனைத்து வகையான சிகிச்சைகளையும் வழங்கும் ஒரு சரும சிகிச்சை நிலையத்தை நிறுவும் தனது முயற்சியை மேலும் வலுப்படுத்தியவண்ணம், உலகத்தரம் வாய்ந்த சூழலில், அதிநவீன மருத்துவ அழகுக்கலை உபகரணங்களை உபயோகித்து,தொழில்சார் தகைமை கொண்ட மற்றும் அனுபவம் வாய்ந்தவர்களைக் கொண்டஒரு சூழலைத் தோற்றுவிப்பதேடு LUSH இன் இலட்சியம். மிகமுக்கியமாக இந்த நிலையத்திற்குள் காலடியெடுத்து வைக்கின்ற வாடிக்கையாளர்கள் தமது அந்தரங்கத்தைப் பேணியவாறு, வைத்தியசாலை அல்லாத ஒரு சூழலில் தேவையான சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளமுடிகின்றது.   

சுலக்ஷி ரணதுங்கவை தமது வர்த்தகநாமத் தூதுவராக நியமித்துள்ளமைதொடர்பாக LUSH மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் ஷேரோமி சமரதிவாகர கருத்துத் தெரிவிக்கையில்,

 “அழகு என்பது மனது தொடர்பானது, அழகாகத் தோற்றமளிக்கும் உரிமை ஒவ்வொரு பெண்ணுக்கும் உண்டு. இன்று அழகுக்கலை தொழில்நுட்பம் எமது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான, திறன்மிக்க மற்றும் நீண்டகாலம் பலனளிக்கின்ற சிகிச்சை அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள இடமளித்துள்ளதுடன், மற்றையவர்கள் முன்னிலையில் நேர்த்தியாகவும், தன்னம்பிக்கையுடனும் திகழவும் உதவுகின்றது. 

எமது வாடிக்கையாளர்கள் மத்தியில் இச்செய்தியை எடுத்துச் செல்லவிரும்பினோம். ஆகவே மிஸ் ஸ்ரீ லங்கா 2014 போட்டியில் மகுடம் வென்ற சுலக்ஷியை எமது வர்த்தக நாமத் தூதுவராக நியமிப்பதற்கு தீர்மானித்தோம். பெண்களின் நவநாகரிகம் மற்றும் அழகில் தனது தனித்துவமான சிறப்பினை வெளிப்படுத்தியுள்ள அவர், தனது அழகுக்கலை சிகிச்சைகளுக்காக எமது சிகிச்சை நிலையத்தின் வாடிக்கையாளராக இருந்துள்ள நிலையில், எமது வர்த்தகநாமத்தின் உறுதிமொழியைஅங்கீகரித்து, இச்செய்தியை மற்றையவர்களுக்குஎடுத்துச் செல்வதற்குமிகவும் பொருத்தமான ஒருவராக இருப்பார்”என்றுகுறிப்பிட்டார்.    

LUSH இனை அங்கீகரிப்பதில் தனதுபங்களிப்புதொடர்பாகசுலக்ஷி குறிப்பிடுகையில் ,

“ஒருவிடயத்தை பிரதிநிதித்துவம் செய்யும் பணி உங்களுக்கு தரப்படுகின்ற சமயத்தில் நீங்கள் அதனை முன்னெடுப்பதில் நேர்மையுடன் செயற்பட வேண்டியுள்ளதுடன்,விடயம் தொடர்பில் 100%நிச்சயம் கொண்டவராகவும் இருத்தல் வேண்டும். 

கடந்த சிலமாதங்களாக LUSH இன் வாடிக்கையாளராக அடிக்கடி அங்கு விஜயம் செய்துள்ளநான், எனக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் மூலமாக வியக்கவைக்கும் பலாபலன்களை அவதானித்து, மகத்தான நம்பிக்கையை வளர்த்துள்ளேன். இறுதியில் தங்களது வர்த்தக நாமத்தின் தூதுவராக செயற்படுமாறு LUSH என்னிடம் வேண்டுகோளை முன்வைத்தபோது உண்மையில் நான் அந்தப் பணியைமிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டுள்ளேன்”என்று கூறினார்.  

கொழும்பு 05 இல் அமைந்துள்ள Lush@Park மற்றும் பத்தரமுல்லையில் அமைந்துள்ள Lush@Capital ஆகியன LUSH இன் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்தும் வியக்கவைக்கும் சிகிச்சைகளை வழங்கிவருகின்றன. இந்த இரு சிகிச்சை நிலையங்களிலும் இலங்கையின் சுகாதாரப் பராமரிப்பு தொழிற்துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவத்தைக் கொண்டுள்ள திறமைமிக்க அணியினர்  உள்ளனர். 

பல்வேறுபட்ட பிரத்தியேகமான, முழுமையான அழகுக்கலை சருமப் பராமரிப்பு தீர்வுகளை நியாயமான கட்டணங்களில் வழங்கவேண்டும் என்றநோக்குடன் 2014 ஆம் ஆண்டில் LUSH ஆரம்பிக்கப்பட்டிருந்தது. புதிதாக விஸ்தரிக்கப்பட்டுள்ள நிலையவளாகம் ஒவ்வொருவருக்கும் அவர்களின் பிரச்சினைகளுக்குநேர்த்தியானதீர்வைவழங்க இடமளிப்பதுடன், முன்னர் ஒரு போதும் பெற்றிராத அழகுமேம்பாட்டை அவர்களுக்கு வழங்கும்.