விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு விளம்பரம் தேட முயற்சித்த சந்தேகத்தின் பேரில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிறந்திருக்கும் புத்தாண்டின் முதல் நாளில், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் படத்துடன் கூடிய வாழ்த்துச் செய்தியை இணையத்தில் பரப்பியதாகவே இவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்கை விசாரித்த கொழும்பு மேலதிக நீதவான், சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரும் இரத்தினபுரியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.