(இரோஷா வேலு)

சமூக வலைத்தளங்களில் அண்மையில் பலரின் விமர்சனத்திற்குள்ளாகியுள்ள லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்த்தானிகராலயத்தில் பணியாற்றும் அமைச்சரின் பாதுகாப்பு ஆலோசகர் அவமதிப்பான நடத்தையில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் சார்ந்த காணொளி தொடர்பில் ஒருபக்கச்சார்பான நடவடிக்கை எடுக்க முடியாது. இக்காணொளி குறித்து துரித விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக இராணுவ பேச்சார் மேஜர் ஜெனரல் ரொஷன் செனவிரத்ன தெரிவித்தார். 

அதனுடன் இச்சம்பவத்துடன் தொடர்புடையதான அதிகாரியை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணிகளிலிருந்து இடைநிறுத்துமாறு கோரி நேற்று  லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்த்தானிகருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதனை இரத்துசெய்து மீண்டும் அவரை பணிகளுக்கு திரும்புமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்தார்.