ஜனாதிபதி செயலகத்தின் டெங்கு ஒழிப்பு பணியகமும் சுகாதார அமைச்சும் இணைந்து இன்று ஆரம்பித்துள்ள தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தையொட்டி மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் 1000 இடங்களில் டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக  கல்லடி பிரதேச பொது சுகாதார பரிசோதகர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.

கல்லடி மற்றும் நாவற்குடா பிரதேசங்களில் கடற்படை மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மட்டக்களப்பு சுகாதார வைத்தியதிகாரி பணிமனையினால் டாக்டர். அச்சுதனின் மேற்பார்வையில் 20 குழுக்களாக பிரிக்கப்பட்டு இச்சோதனை நடவக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

கல்லடி இராணுவ தலைமையகம், பொலிஸ் நிலையம் உட்பட அரச அலுவலகங்கள், வீடுகள் உட்பட 1000 இடங்கள் இத்திட்டத்தின்கீழ் சோதனையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பல இடங்களில் டெங்கு குடம்பிகள் கண்டுப்பிடிக்கப்பட்டு அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதுடன் பலர் எச்சரிக்கையும் செய்யப்பட்டனர்.

- ஜவ்பர்கான்