ஹட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர் தேக்கத்திற்கு அருகாமையில் லெதன்டி தோட்டபகுதியில் இன்று காலை 9.30 மணியளவில் இறந்த நிலையில் சிறுத்தையின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் .

குறித்த லெதன்டி தோட்ட மக்களால் ஹட்டன் பொலிஸாருக்கு வழங்கபட்ட தகவலின் அடிபடையில் சம்பவ  இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த சிறுத்தையின் உடலை மீட்டுள்ளனர்.

உடலமாக மீட்கபட்ட சிறுத்தைக்கு கழுத்து பகுதியில் காயங்கள் காணப்படுவதாகவும், இது தொடர்பாக வனவிலங்கு காரியாலய அதிகாரிகளுக்கு  அறிவிக்கபட்டுள்ளதாகவும்  பொலிஸார்  தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.