“ விடுதலைப்புலிகள் தொடர்பில் முக்கிய தகவல்களை வெளியிட்டார் மஹிந்த”

Published By: Priyatharshan

07 Feb, 2018 | 10:36 AM
image

யுத்­தத்தின் இறுதிக் கட்­டத்தில் புலி­களின் தலை­வர்கள் சர்­வ­தேச சமூகம் ஊடாக சர­ண­டை­யப்­போ­வ­தாக   எந்த தக­வலும் எனக்கு கிடைக்­க­வில்லை. எனது அர­சாங்­கத்தின் முக்­கி­யஸ்­தர்கள் எவ­ருக்கும் அவ்­வா­றான தகவல் கிடைக்­க­வில்லை.

எனினும் யுத்­தத்தின் இறுதிக்கட்­டத்தில் அதி­க­மான புலி உறுப்­பி­னர்கள் பாது­காப்பு தரப்­பி­ன­ரிடம் சர­ண­டைந்­தனர். அவர்கள் தொடர்­பான பொறுப்பை நாம் ஏற்­றுக்­கொண்டோம்   என்று   முன்னாள் ஜனா­தி­ப­தியும்    பொது­ஜன பெர­மு­னவின் முக்­கி­யஸ்­த­ரு­மான  மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்தார். 

நான் தெற்கைவிட வடக்­கிற்கே அதிக முக்­கி­யத்­துவம் வழங்கி அபி­வி­ருத்தி செய்தேன்.  ஒரு நாடு என்ற கட்­ட­மைப்­புக்குள் பிரச்­சி­னையை தீர்ப்­பதே எனது நிலைப்­பா­டாகும். அர­சியல் அமைப்பை சம்­பந்­தப்­ப­டுத்தி இந்த பிரச்­சி­னையை தீர்க்க முயற்­சித்தால் சிங்­கள – தமிழ் மக்கள் மீண்டும் தூர விலகி சென்­று­வி­டு­வார்கள்  என்றும்  முன்னாள் ஜனா­தி­பதி குறிப்­பிட்டார். 

வீரகேசரி நாளி­த­ழுக்கு வழங்­கிய  விசேட செவ்­வி­யி­லேயே  மஹிந்த ராஜ­பக் ஷ இந்த விட­யத்தை குறிப்­பிட்டார். செவ்­வியின் முழு விபரம் வரு­மாறு   

Q : இந்த நாட்டில் இரண்டு முறை நிறை வேற்று ஜனா­தி­ப­தி­யாக இருந்த நீங்கள் மூன்­றா­வது முறை போட்­டி­யிட்டு தோல்வி அடைந் தீர்கள். உங்கள் தோல்­விக்கு என்ன காரணம்?

A: சர்­வ­தேச அழுத்­தங்­க­ளுக்கு அடி­ப­ணி­யாமல் யுத்­தத்தை முடித்­தமை, நாட்­டி­னதும் மக்­க­ளி­னதும் சுயா­தீ­னத்தை பாது­காத்து அபி­வி­ருத்­தியை முன்­னெ­டுத்­ததே எனது தோல்­விக்கு காரணம். வெளிநாட்டு சக்­தி­க­ளுக்கும் அவர்­களின் உள்­நாட்டு முக­வர்க­ளுக்கும் எமது அர­சாங்­கத்தை கவிழ்க்க தேவை இருந்­தது. எமது அர­சாங்­கத்தில் காணப்­பட்ட குறை­பா­டுகள், பல­வீ­னங்கள் என்­பன இவர்­களின் நோக்­கத்தை நிறை­வேற்ற உரம் சேர்த்­தன. 

உலகின் எந்­த­வொரு நாட்­டிலும் எங்­களைப் போன்று சுயா­தீ­ன­மாக எழும்ப முயற்­சிக்­கும்­போது இவ்­வாறு நடை­பெ­று­வது வழக்கம். தற்­போது 2015ஆம் ஆண்டு ஜன­வரி 08ஆம் திக­திக்கு பின்னர் நாட்டின் பொரு­ளா­தாரம் கட்­டு­டைந்து போயுள்­ளது. மக்கள் வாழ முடி­யாது திண்­டா­டு­கி­ன்­றனர். அர­சியல் ஸ்திரத்­தன்மை இல்லை. சிறிய நாடுகள் இவ்­வாறு அராஜக நிலைக்கு செல்­வதை சர்­வ­தேச சமூகம் விரும்பும். எனினும் எமது தோல்வி தற்­கா­லி­க­மா­னது. என்­ன நடந்­தது என்­பதை மக்கள் புரிந்து கொண்டு விட்­டனர்.

Q :2015ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்­குகள் ஏன் உங்­க­ளுக்கு கிடைக்­க­வில்லை? 

A: இந்த நாட்டு மக்­களின் தேவைக்கு அப்பால் சர்­வ­தேச தேவை­க­ளுக்கு அமை­வா­கவே இலங்­கையில் இனங்­களை அடிப்­ப­டை­யா­கக் ­­கொண்ட ஆயுத மோதல்கள் உரு­வா­கின. இந்த நாட்டை பிரிப்­பதே அவர்­களின் நோக்­க­மாக இருந்­தது. ஆனால், அந்த முயற்­சியை யுத்­தத்தின் மூலம் நான் முடித்து வைத்தேன். எனினும் இன­வாத சக்­திகள் நான் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான ஒருவன் என்ற ஒரு பிர­மையை உரு­வாக்­கின. எனினும் யுத்தம் முடிந்­ததன் பின்னர் எனது அர­சாங்கம் வடக்கு, கிழக்கை கட்­டி­யெ­ழுப்ப எவ்­வ­ளவு வேலைகள் செய்­தது தெரி­யுமா? தெற்கை விட வடக்­குக்கு அதிக முக்­கி­யத்­துவம் கொடுத்தேன். நல்­லாட்சி அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து மூன்று வரு­டங்கள் கடந்து விட்­டன. இந்த நல்­லாட்சி அர­சாங்கம் வடக்கு, கிழக்கு மக்­க­ளுக்­காக என்ன செய்­தது? தமிழ் கூட்­ட­மைப்பு இந்த நாட்டின் எதிர்க்­கட்­சி­யாக உள்­ளது. அவர்கள் கடந்த மூன்று வரு­டத்தில் தம் மக்­க­ளுக்­காக என்ன செய்­தனர் தமிழ் அர­சியல் கட்­சிகள் எப்­போ­துமே மக்­களை ஏமாற்­று­வதையே  செய்­து­வந்­துள்­ளன.

கவ­லையை விற்று வரப்­பி­ர­சா­தங்கள் பெற்­ற­தையே அவைகள் செய்­தன. தெற்கு மக்­க­ளைப்­போன்று வடக்கு, கிழக்கு மக்­களை பொரு­ளா­தார ரீதி­யாக பலப்­ப­டுத்­தவே நான் முயற்­சித்தேன். அதைத்தான் நான் செய்ய வேண்டும்.முஸ்லிம் மக்­களை எம்­மி­ட­மி­ருந்து தூர விலக்­கி­யது யார் என்­பது இன்று நன்­றா­கவே தெரியும். இவ்­வாறு தற்­கா­லிக அர­சியல் சுய­லா­பத்­திற்­காக இன ரீதி­யாக மோதல்­களை ஏற்­ப­டுத்­து­வது நீண்ட காலத்தில் நாட்­டுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும். 

Q : 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிந்­ததும் இனப்­பி­ரச்­சி­னையை தீர்க்க உங்களுக்கு சிறந்த சந்­தர்ப்பம் கிடைத்­தது. நீங்கள் அதனை பயன்­ப­டுத்­த­வில்­லையே ஏன்?

A: நீங்கள் கூறும் இந்த தீர்வு எது என்­பது தெளிவா­க­வில்லை. பிரி­வி­னை­வா­திகள் பிர­பா­கரன் ஊடாக இந்த நாட்டை பிரிக்க முற்­பட்­டனர். யுத்­தத்தில் கொடுக்க முடி­யாத ஈழத்தை வெறு­மனே கொடுப்­பதா தீர்வு. நான் தெற்கு மக்­களை மட்­டு­மல்ல வடக்கு, கிழக்கு மக்­க­ளையும் பிர­பா­க­ர­னி­ட­மி­ருந்து மீட்­டெ­டுத்தேன். நான் தோல்வி அடைவேன் என்று தெரிந்தும் வடக்கு, கிழக்கு மாகாண சபை­களை நடத்­தினேன். அந்த மக்கள் தமது தலை­வர்­களை தெரிவு செய்­யவே இதனை செய்தேன். யுத்­தத்தில் ஆயி­ரக்­க­ணக்­கான புலி உறுப்­பி­னர்­களை புனர்­வாழ்­வ­ளித்து விடு­வித்தேன். 30 வருட யுத்­தத்­தினால்  அழி­வ­டைந்த  தமிழ் மக்­களின் வாழ்க்­கையை ஒரு இரவில்  முழு­மை­யாக  கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது.  அதனை படிப்­ப­டி­யா­கவே  செய்­ய­வேண்டும்.    அதனை நான் ஆரம்­பித்­தி­ருந்தேன். 

Q : முன்னாள் புலி உறுப்­பி­னர்­களை சமூ­க­ம யப்­ப­டுத்­திய நீங்கள்  200  தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விக்­க­வில்லை.  ஏன்? 

A: யுத்தம் முடி­வ­டைந்­த­வுடன் சமா­தானம்  உரு­வா­காது. வென்­றெ­டுத்த யுத்த வெற்­றியை   பாத­ுகாப்­ப­தற்கு சில பரி­சோ­த­னை­க­ளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.  முன்னாள் புலி உறுப்­பி­னர்கள் சமூ­கத்­திற்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தமாட்­டார்கள் என உறு­திப்­ப­டுத்­திய பின்­னரே அவர்­களை விடு­வித்தோம். அவை படிப்­ப­டி­யா­கவே இடம்­பெற்­றன. இவர்கள் அனை­வரும் பயங்­க­ர­வாத அமைப்பில் இருந்­த­வர்கள் என்­பதை மறந்­து­வி­டக்­கூ­டாது. புலிகள் அமைப்­பா­னது இலங்­கையில் மட்­டு­மன்றி சர்­வ­தேச அமைப்­பிலும் தடை­செய்­யப்­பட்­டது. அவர்­களை அர­சியல் கைதிகள் என்று குறிப்­பிட முடி­யாது. எனினும் இவர்­களை மேலும் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கலாம். தற்­போது நான் பத­வி­யி­ழந்து மூன்று வரு­டங்கள் ஆகி­விட்­டன. சக வாழ்வு தொடரில் உயர்ந்த மட்­டத்தில் பேசும் இந்த அர­சாங்­கமும் அவர்­களை விடு­விக்­க­வில்­லையே. 

Q :யுத்­தத்­தினால் காணா­மல்­போ­ன­வர்­களின் உற­வி­னர்­க­ளுக்கு 2015ஆம் ஆண்­டு­வரை நீதி கிடைக்­க­வில்லை. அந்தப் பொறுப்பை நீங்கள் ஏன் புறக்­க­ணித்­தீர்கள்?

A: யுத்­தத்தின் பின்­ன­ரான முகா­மைத்­துவம் என்­பது சிக்கல் கொண்­டது. மீண்டும் யுத்தம் இடம்­பெ­றாமல் இருக்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­க­வேண்டும். வெளி­ச்சக்­தி­களின் அழுத்­தங்­க­ளுக்கு உட்­பட வேண்டும். இந்த அனைத்து சவால்­க­ளுக்கு மத்­தி­யிலும் நான் காணா­மல்­போ­னோரின் உற­வு­களை மறக்­க­வில்லை. அத­னால்தான் பர­ண­கம ஆணைக்­கு­ழுவை நிய­மித்தேன்.

காணா­மல்­போனார் தொடர்பில் மிகவும் கவ­ன­மா­கவே இறுதி முடி­வுக்கு வர­வேண்டும். அதற்­காக நாம் சட்­டங்­க­ளைக்­கூட மாற்­று­வ­தற்கு முயற்­சித்தேன். எனினும் அதில் சில தாம­தங்கள் இருந்­தன. 

Q : நீங்கள் வடக்கு, கிழக்கை அபி­வி­ருத்தி செய்­தீர்கள். எனினும் தேசிய பிரச்­சி னையை

தீர்க்க நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. உங்க­ளுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தற்கு அன்று சம்­பந்­தன் கூட முன் ­வந்தார் தானே?

A: நான் தெற்கை விட வடக்­கிற்கே அதிக முக்­கி­யத்­துவம் வழங்கி அபி­வி­ருத்தி செய்தேன். யார் ஆத­ரவு வழங்க முற்­பட்­டாலும் ஒரு நாடு என்ற கட்­ட­மைப்­புக்குள் பிரச்­சி­னையை தீர்ப்­பதே எனது நிலைப்­பா­டாகும். அர­சியல் அமைப்பை சம்­பந்­தப்­ப­டுத்தி இந்த பிரச்­சி­னையை தீர்க்க முயற்­சித்தால் சிங்­கள–தமிழ் மக்கள் மீண்டும் தூர விலகிச் சென்­று­வி­டு­வார்கள். சிங்­கள– தமிழ்– முஸ்லிம் மக்கள் அனை­வரும் தேசிய உணர்­வுடன் வேலை செய்­யாமல் தமது விட­யங்­களை மட்டும் பார்த்­துக்­கொள்­ளும்­வரை இந்த பிரச்­சி­னையை தீர்­க்க முடி­யாது.

Q : நீங்கள் இன­வா­தி­க­ளுடன் கூட்­டுச்­சேர்ந்­துள்­ள­தாக தமிழ் மக்கள் குற்­றச்­சாட்டை முன்­

வைக்­கின்­றனர். இதற்கு உங் கள் பதில் என்ன?

A: யுத்­தத்தை முடித்­ததன் மூலம் சிங்­கள மக்­க­ளுக்கு மட்­டு­மன்றி தமிழ் –முஸ்லிம் மக்­க­ளுக்கும் நான் சுதந்­தி­ரத்தைப் பெற்­றுக்­கொ­டுத்தேன். நாங்கள் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரான யுத்­தத்தை செய்­ய­வில்லை. பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு எதி­ரா­கவே யுத்தம் செய்தோம். தேசிய பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்­கான எனது அணு­கு­முறை இன­வாதம் அல்ல. மாறாக அது  தேசிய மட்­டத்­தி­லா­னது. எனினும் பிர­பா­க­ரனின் நிலைப்­பாட்­டுடன் இருந்த தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு இந்த பிரச்­சி­னையை இன­வாத நோக்­கி­லேயே பார்க்­கின்­றது.

Q : அப்­ப­டி­யானால் தமிழ்–முஸ்லிம் மக்கள் இதற்கு பின்­னரும் உங்­களை நம்­ப­வேண் டும் என கூறு­கின்­றீர்­களா?

A: நிச்­ச­ய­மாக என்னை நம்­பலாம். நான் சிங்­கள மக்­க­ளுக்கு மட்­டு­மல்ல சிங்­கள– தமிழ்– முஸ்லிம் என அனைத்து மக்­க­ளதும் தலைவர்.

Q : யுத்­தத்தின் இறுதிக்கட்­டத்தில் புலி­களின் தலை­வர்கள் சர்­வ­தேச சமூகம் ஊடாக சர ண­டை­யப்­போ­வ­தாக உங்­க­ளுக்கும் உங்­க­ளது அர சாங்­கத்தின் முக்­கி­யஸ்­தர்­க­ளுக்கும் தகவல் அனுப் பி­ய­தாக கூறப்­ப­டு­கி­றதே. அவ்­வா­றான தகவல் உங் ­க­ளுக்கு கிடைத்­ததா?

A: அது­போன்ற எந்த தக­வலும் எனக்கு கிடைக்­க­வில்லை. எனது அர­சாங்­கத்தின் முக்­கி­யஸ்­தர்கள் எவ­ருக்கும் அவ்­வா­றான தகவல் கிடைக்­க­வில்லை. எனினும் யுத்­தத்தின் இறுதிக்கட்­டத்தில் அதி­க­மான புலி உறுப்­பி­னர்கள் பாது­காப்பு தரப்­பி­ன­ரிடம் சர­ண­டைந்­தனர். அவர்கள் தொடர்­பான பொறுப்பை நாம் ஏற்­றுக்­கொண்டோம்.

Q :வடக்கு–கிழக்கு தமிழ் பேசும் மக்­க­ளுக்கு இந்தத் தேர்­தலில் நீங்கள் கூறு­வது என்ன?

A: ஆசை­வார்த்­தை­களை கூறும் தரப்­பி­ன­ரிடம் ஏமாற வேண்டாம் என்­ப­தையே தமிழ்­பேசும் மக்­க­ளுக்கு கூறு­கின்றேன். இது எம் அனை­வ­ரி­னதும் நாடு. இது எமக்கு உரி­மை­யான நாடு. எனவே பிரி­வி­னை­வா­தி­க­ளி­ட­மி­ருந்து எமது நாட்டை பாது­காக்க இந்தத் தேர்­தலை பயன்­ப­டுத்­து­மாறு கோரு­கின்றேன்.

Q :பாரிய ஊழல் தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் உங்­க­ளது

பெயர், உங்­க­ளது சகோ­த­ரர்­களின் பெயர்கள் முன் வைக்­கப்­பட்­டுள்­ளதே?

A: 125 இலட்சம் ரூபாவை தேர்தல் காலத்தில் விளம்­பர கட்­ட­ண­மாக ஒரு தொலைக்­காட்சி நிறு­வ­னத்­திற்கு செலுத்­த­வில்லை என்­பதே எனக்­கெ­தி­ராக இருக்கும் குற்­றச்­சாட்­டாகும். பிர­தான கட்­சி­களின் ஜனா­தி­பதி வேட்­பா­ளர்கள் தொலைக்­காட்­சி­க­ளுடன் தனிப்­பட்ட ரீதியில் விளம்­பரம் கொடுப்­ப­தற்கு முயற்­சிக்­க­மாட்­டார்கள். குறித்த அர­சியல் கட்­சியின் தேர்­த­லுக்­காக நிறு­வப்­படும் ஊடக குழுவே விளம்­பர நிறு­வ­னங்­களைக் கொண்டு இதனை செய்யும். 

ஏதா­வது ஒரு தொலைக்­காட்­சிக்கு பணம் செலுத்­தப்­ப­டா­விடின் குறித்த விளம்­பர நிறு­வனம் ஊடா­கவே பணத்தை பெற­வேண்டும். குறித்த விளம்­பர நிறு­வனம் அர­சியல் கட்­சி­யி­ட­மி­ருந்து பணத்தை பெற­வேண்டும். 2015ஆம் ஆண்டு நான் சுதந்­திரக் கட்­சியின் வேட்­பா­ள­ராக வர­வேண்டும் என அப்­போது கட்­சியின் செய­லா­ள­ரான மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே பிரே­ரணை செய்தார். எனவே குறித்த தொலைக்­காட்சி நிறு­வ­னத்­திற்கு நிதி செலுத்­தப்­ப­ட­வேண்­டு­மாயின் அதனை கட்­சியே செலுத்­த­வேண்டும்.

Q :2008 முதல் 2014 ஆம் ஆண்டுவரை மத் திய வங்­கியில் பிணை­முறி மோசடி இடம் பெற்­றுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றதே. அது தொடர்பில்?

A: எனது ஆட்சிக்காலத்தில் பிணை­முறி மோசடி எதுவும் நடக்­க­வில்லை. ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் தமது விட­யங்­களை மூடி­ம­றைக்க கடந்த ஆட்­சியில் மோசடி இடம்­பெற்­ற­தாக கூறு­கின்­றனர். முன்னாள் நிதி­ய­மைச்­சரின் கோரிக்­கைக்கு அமை­வாக 2008முதல் 2014ஆம் ஆண்­டு­வரை இடம்­பெற்ற பிணை­முறை தொடர்பில் கணக்­காய்­வாளர் நாயகம் ஏற்­க­னவே பரி­சோ­தனை செய்­தி­ருக்­கிறார். அது தொடர்பில் அறிக்­கையும் உள்­ளது. எனது அர­சாங்­கக்­கா­லத்தில் தான் பிணை முறி விநி­யோ­கத்­தின்­போது சிறந்த முறைமை பின்­பற்­றப்­பட்­டது. தற்­போ­தைய முறைமை மாற்­றப்­பட்­ட­மையே மோச­டிக்கு காரணம். 

Q : ஐ.ம.சு.முன்­ன­ணியின் 95 உறுப்­பி­னர் களும் தன்­னுடன் சேர்ந்தால் தான் தனித்து ஒரு அர­சாங்­கத்தை உரு­வாக்­கு­வ­தாக ஜனா­தி­பதி கூறி­யி­ருக்­கிறார். இதற்கு உங்கள் பதில் என்ன?

A: இது அர­சியல் தந்­தி­ர­மாகும். உள்­ளூ­ராட்சி தேர்­தலில் சுதந்­திரக் கட்சி தலை­மை­யி­லான கூட்­ட­ணிக்கு தோல்வி கிடைக்கும் என தெரிந்­ததும் அர­சாங்கம் அமைக்க எம்மை அழைக்­கின்­றனர். இங்கு நாட­கமே அரங்­கேற்­றப்­ப­டு­கி­றது. இதில் மக்கள் சிக்­க­வேண்­டி­ய­தில்லை. தேர்தல் கார­ண­மாக ஐ.தே.க.வும் சு.க.வும் ஒரே அர­சாங்­கத்தில் இருந்­து­கொண்டு ஒரு­வ­ரை­யொ­ருவர் விமர்­சிக்­கின்­றனர். 

இதற்கு மக்கள் ஏமா­றக்­கூ­டாது. இங்கு என்ன நடந்­துள்­ளது என்றால் பிணை­முறி அறிக்­கையை ஜனா­தி­பதி செய­ல­கத்­திற்கு கொடுத்ததும் அதிலிருந்து சில பகுதிகள் காணாமல் போயுள்ளன. அது தொடர்பில் எமது எம்.பி.க்கள் கேள்வி எழுப்பியதும் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை என சுதந்திரக் கட்சியினர் கூறினர். எனினும் எதிர்ப்பு வலுவாகியபோது அதிலிருந்து இரகசியப் பகுதிகள் வெளிப் படுத்தவில்லை என ஜனாதிபதி கூறினார். 

இதன்மூலம் ஐ.தே.க.வை காப்பாற் றுவதற்கு முயற்சிக்கப்பட்டுள்ளது. இது ஆச்சரியத்திற்குரியதல்ல. 2015ஆம் ஆண்டு கோப் அறிக்கையை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கவிடாமல் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தார். அதுதான் இப்போதும் நடைபெறுகிறது. சில நெத்தலி மீன்களை தண்டித்துவிட்டு சுறா மீன்களை பாதுகாப்பதற்கு முயற்சிக் கப்படுகிறது. 

Q :நீங்கள் சுதந்திரக் கட்சியிலிருந்து விலக வில்லை என கூறுகின்றீர்கள். ஆனால் மொட்

டுக்கு வாக்களிக்குமாறும் கூறுகின்றீர்கள் . ஏன்  இந்த

முரண்பாடு?

A: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்னும் இருக்கிறது. ஆனால் அது யானையின் வாலில் கட்டிவைக்கப்பட்டுள்ளது. நாம்

இப்போது மொட்டில் வாக்கு கேட்கி றோம். மக்கள் அனைவரும் இணைந்து அவர்களின் தேவைக்காக மொட்டு கட்சியை உருவாக்கியுள்ளனர். எம்மிடம்தான் சுதந்திரக் கட்சியின் கொள்கையும் பண்டாரநாயக்கவின் கொள்கையும் இருக்கின்றன. பொதுஜன பெரமுன வெற்றிபெற்றால் அந்த கொள்கைகள் பாதுகாக்கப்படும். அதனால்தான் மொட்டுக்கு வாக்களிக்குமாறு கூறுகின்றேன்.

(ரொபட் அன்டனி )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிள்ளையானிற்கு பிணை கிடைக்க உதவிய பசில்...

2025-02-06 16:41:49
news-image

வலிமையானவர்கள் தோல்வியுற்ற இடத்தில் - இலங்கையில்...

2025-02-05 21:23:34
news-image

ஊடகவியலாளர்களே அலட்சியப்படுத்தாது உங்கள் பாதுகாப்பை உறுதிசெய்யுங்கள்...

2025-02-05 17:05:14
news-image

பாராளுமன்றத்துக்கு வெளியே சுத்தப்படுத்த வேண்டியவை…!

2025-02-05 17:19:24
news-image

லசந்தவின் வாகனச்சாரதியை கடத்தியவர் ; லசந்தவின்...

2025-02-05 16:21:31
news-image

பாரதிய ஜனதாவின் உள்நாட்டு அரசியல் நிகழ்ச்சி...

2025-02-05 09:56:52
news-image

எதிர்காலத்துக்காக ஈரநிலங்களைப் பாதுகாப்போம்!

2025-02-04 17:15:47
news-image

இராணுவத்தை போற்றி பாதுகாக்கும் பாரத இந்தியா

2025-02-04 13:34:29
news-image

ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயமும் அதன் தாக்கங்களும்

2025-02-04 10:59:53
news-image

முன்னெச்சரிக்கையால் பாதிப்பை குறைத்து புற்றுநோயை வெல்வோம்!...

2025-02-04 11:05:21
news-image

2025க்கான ஒதுக்கீடு சட்டமூலமும் பொருளாதார நோக்கும்

2025-02-03 20:08:27
news-image

புது டில்லி சட்ட பேரவை தேர்தல்:...

2025-02-03 16:39:04