மத்­திய வங்கி பிணை­முறி மோசடி மற் றும் பாரிய ஊழல் மோசடி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­குழு அறிக்­கைகள் தொடர்­பான சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணையை நேற்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பாரா­ளு­மன்­றத்தில்   முன்­வைத்து விவா­தத்தை ஆரம்­பித்தார். எனினும் இந்த விவா­தத்­திற்கு பெரும்­பா­லான உறுப்­பி­னர்கள் வருகை தர­வில்லை. இதனால் மந்­த­க­தியில் விவாதம் நடை­பெற்­றது.

பிர­த­மரின் பிரே­ர­ணையை சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான ல­க்ஷமன் கிரி­யெல்ல முன்­மொ­ழிந்தார்.

பாரா­ளு­மன்றம் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை காலை 10.30 மணிக்கு சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தலை­மையில் கூடி­யது. இதன்­பின்னர் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணையை முன்­வைத்தார்.

பிர­த­மரின் சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணையை சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான ல­க்ஷமன் கிரி­யெல்ல அமோ­தித்தார்.

மத்­திய வங்கி பிணை­முறி மோசடி மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­குழு அறிக்­கைகள் மீதான விவாம் தொடர்பில் அனை­வ­ரி­னதும் எதிர்­பார்ப்பு இருந்­தது. எனினும் நாடு எதிர்­பார்த்த வகையில் விவா­தத்தின் நட­வ­டிக்­கைகள் இருக்­க­வில்லை. பாரா­ளு­மன்ற அமர்­வுகள் மிகவும் மந்­த­க­தியில் இருந்­தது.  அத்­துடன் எதிர்­பார்த்த அள­விற்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எவரும் விவா­தத்­திற்கு பங்­கு­பற்­ற­வில்லை.

பாரா­ளு­மன்ற அமர்வு ஆரம்­பித்த போது சபையில் 20 உட்­பட்ட உறுப்­பி­னர்கள் மாத்­தி­ரமே அமர்ந்­தி­ருந்­தனர். பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உட்­பட ஐக்­கிய தேசியக் கட்சி உறுப்­பி­னர்கள் பலர் இருந்­தனர். மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் விஜித்த ஹேரத் தவிர ஏனையோர் வருகை தந்­தி­ருந்­தனர். சுதந்­திரக் கட்­சியில் நான்கு பேர­ள­வி­லேயே வருகை தந்­தி­ருந்­தனர். கூட்டு எதிர்க்­கட்­சியில் பெருந்­தொ­கை­யானோர் வருகை தந்­தி­ருக்­க­வில்லை. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினர் எவரும் வருகை தர­வில்லை.

 பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உரை­யாற்­றி­யதன் பின்னர் ஐக்­கிய தேசியக் கட்சி சார்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ஹர்ஷ டி சில்வா, எரான் விக்­கி­ர­ம­ரத்ன, ரவி கரு­ணா­நா­யக்க, அஜித் பீ பெரேரா ஆகி­யோரும் சுதந்­திரக் கட்சி சார்பில் மஹிந்த அம­ர­வீர, லசந்த அல­கி­ய­வண்ண ஆகி­யோரும் கூட்டு எதிர்க்­கட்சி சார்­பில பந்­துல குண­வர்­தன, விமல் வீர­வன்ச, உதய கம்­மன்­பில ஆகி­யோரும் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அதன் தலைவரும் எதிர்க்கட்சி பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாயக்க விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றினர். இதன்படி காலை 10.30 மணிக்கு பாராளுமன்றம் கூடி மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது.