இலங்கையின் கையடக்கத் தொலைபேசிச் சேவை வழங்குனரான மொபிடெல் புரட்சிகரமான 4.5G (4G Plus) இனை இத்தொழிற்துறைக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பாவனையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதில் பெருமைபடுகிறது.
மொபிடெலின் இந்த மூலோபாய முன்னெடுப்பானது வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த சேவையை வழங்குவதற்காக தமது தொழில்நுட்பத்தை தொடர்ந்தும் மேம்படுத்துகிறது. மொபிடெல் வாடிக்கையாளர்கள் தற்போது அதிக அகலப்பட்டை(bandwidth) மற்றும் உயர் னுயவய வேகத்தின் மூலம் அதிசிறந்த ஒன்லைன் அனுபவம் மற்றும் மியுசிக், வீடியோ, கேம்களை நிலையான வேகத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளவும் முடியும்.
அத்தோடு பெருநிறுவனங்களுக்கான தனித்துவமாக்கப்பட்ட தீர்வுகளை அதிகரித்து வரும் அவர்களது தேவைகளுக்கு ஏற்ப வழங்குகிறது. இலங்கையில் மிகவும் முற்போக்கான தொலைத்தொடர்புச் சேவை வழங்குனர் என்ற புகழை ஏந்திய வண்ணம் மொபிடெல் தொடர்ந்தும் தமது புத்தம் புதிய தொழில்நுட்பத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் முதலீடு செய்கிறது. மொபிடெல் இன் இந்நடவடிக்கைகள் சந்தையில் அதன் தலைமைத்துவத்தை மேலும் பலப்படுத்துகிறது.
இந்த 4.5G தொழில்நுட்பமானது (900Mhz + 1800Mhz + 2100Mhz), Carrier Aggregation தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இது மொபிடெல் இன் அலைவரிசையை அதிகப்படுத்தி அதன் மூலம் அகலப்பட்டையினை அதிகப்படுத்துகிறது. இது 4x4 MIMO (Multiple-Input-Multiple-Output) வுக்கு மேம்படுத்துவதன் மூலம் முன்பு போல் அல்லாது புவியியல் ரீதியாக பல அண்டனாக்களையும் வலிமையான சிக்னலையும் கொடுக்கிறது. இறுதியாக, இச்சுழற்சியில் QAM (Quadrature Amplitude Modulation)இனை 64 இலிருந்து 256க்கு அதிகப்படுத்தியுள்து. இதன் மூலம் Data வேகத்தை அதிகரித்துள்ளது.
4.5Gஆனது 5G தரத்துக்கு வருவதற்கான ஒரு பாலமாக அமைகிறது. அதிக Data வைப் பயன்படுத்தும் அப்ளிகேஷன்களுக்கு ஏற்ற வகையில் மொபிடெலின் தற்போதைய 4G வலையமைப்புக்கு ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கொண்டுவரும். 2017 டெக்னோ கண்காட்சியில் மொபிடெல் தமது 4.5G வேகத்தை நிரூபித்ததிலிருந்து அதன் விசுவாசமிக்க வாடிக்கையாளர்கள் 4.5Gவலையமைப்பின் அறிமுகத்துக்காக காத்திருக்கின்றனர்.
மொபிடெல் ஆனது இலங்கையின் தேசிய கையடக்கத் தொலைபேசிச் சேவை வழங்குனர் என்பதுடன் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் முழுமையான உரிமம் பெற்ற ஓர் துணை நிறுவனமும் ஆகும். இந்நிறுவனமானது மொபைல் தொலைபேசிச் சேவைகள், அதிவேக ப்ரோட்பான்ட், நிறுவன ரீதியான தீர்வுகள், IDD சேவைகள் மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகள் என்பவற்றை வழங்குகிறது. தெற்கு ஆசியாவில் சுப்பர் 3.5G வலையமைப்பினை அறிமுகப்படுத்துவதிலும் HSPA + MIMO தொழில்நுட்பத்தை நிரூபிக்கவும் G-LTE மற்றும் 4.5G- LTE Advanced Pro technology என்பவற்றை வெற்றிகரமாக நடத்தவும் மொபிடெல் முன்னோடியாகத் திகழ்ந்தது.
Dual Carrier HSPA+ தொழில்நுட்பம் மற்றும் 4G-LTE சேவைகள் என்பவை மொபிடெல் இன் ப்ரோட்பான்ட் இனை மிக வேகமானதாக மாற்றுகிறது. 2017ஆம் ஆண்டு தெற்காசியாவில் முதன்முறையாக Internet of Things (IoT) இக்கு 5G இன் சோதனை நடவடிக்கைகளை மொபிடெல் ஆரம்பித்தது.
600 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் முதலீட்டுடன் ICT வளர்த்ததுடன் இத்தொழிற்துறையை அபிவிருத்தியின் அடுத்த கட்டத்துக்கு இட்டுச் செல்கிறது. "We Care. Always" என்ற எமது நோக்கத்துக்கு அமைய வளர்ந்து வரும் வாடிக்கையாளர் தளம், வாடிக்கையாளரை மையப்படுத்திய மொபிடெலின் வலுவான கவனம் என்பவற்றுக்கு இது சான்றாக அமைகிறது. மேலதிக விபரங்களுக்கு www.mobitel.lk க்கு பிரவேசியுங்கள். அல்லது 1717 என்ற வாடிக்கையாளர் சேவை இலக்கத்துக்கு அழையுங்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM