(எம்.எப்.எம்.பஸீர்)
அழிந்து வரும் உயிரினமாக கருதி, பாதுகாக்கப்படவேண்டிய விலங்காக அறிவிக்கப்பட்டுள்ள எறும்புண்ணி (Pangolin)ஒன்று கொள்ளுப்பிட்டியில் உள்ள சீன உணவகம் ஒன்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த உணவகத்தின் சமயலறையில் இருந்த குளிரூட்டிக்குள் இருந்தே இந்த எறும்புண்ணி இவ்வாறு உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இந் நிலையில் இந்த உயிரினத்தை குளிரூட்டியில் வைத்திருந்த குறித்த உணவகத்தின் பிரதான சமையல்காரரான சீன பிரஜையையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சீன உணவகத்துக்கு அந்த எறும்பு உண்ணியை சீன சமயல் காரர் கொண்டுவருவதை அப்பகுதியில் இருந்த சிலர் கண்டுள்ள நிலையில், அவர்களால் 119 என்ற அவசர அழைப்பு இலக்கத்துக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே அந்த தகவலுக்கு அமைவாக குறித்த சீன உனவகத்தை முற்றுகையிட்ட பொலிஸார் எறும்புண்ணியை மீட்டுள்ளனர்.
4 அடி நீலமான இந்த எறும்புண்ணி, 6 கிலோ வரை எடை கொன்டது என தெரிவிக்கும் பொலிஸார் அந்த உயிரினத்தை வனஜீவரசிகள் திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர். கைதான சீனப் பிரஜையை கோட்டை நீதிவான் முன்னிலையில் ஆஜர்செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM