ரயிலுடன் லொறியொன்று மோதி விபத்திற்குள்ளானதில் குறித்த ரயிலின் மிதிபலகையில் பயணித்த நால்வர்  உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த விபத்தில் சிலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் இன்று மாலை அங்குலான ரயில் நிலையத்திற்கருகில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

காலி நோக்கிப் பயணித்த ரயிலுடனேயே லொறி மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.