(இராஜதுரை ஹஷான்)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாக்கும் நோக்கிலா மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் அர்ஜுன அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனரென பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள பிணைமுறி விவாதம் தொடர்பில் தெளிவுபடுத்துகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாக்கும் நோக்கிலேயே குறித்த கைதுகள் இடம்பெற்றுள்ளன. இது முழு மோசடியையும் மூடி மறைக்கும் அரசியல் சூழ்ச்சியாகவே காணப்படுகின்றது.

ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கையில் பிரதமர் பிரதான குற்றவாளி என மறைமுகமாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.தேசிய அரசாங்கத்திற்கு  தெரியாத உண்மைகள் தற்போது பொது மக்கள் நன்கு தெரிந்து வைத்துள்ளனர்.  

இடம்பெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலினையும், பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள பினணைமுறி விவகாரத்தில் தமக்கான சாதகத் தன்மையினை பலப்படுத்தவே தற்போது குறித்த கைதுகள் இடம் பெற்றுள்ளன.

10 ஆம் திகதிக்கு பின்னர் இடம் பெறும் பாரிய மாற்றத்தினை நல்லாட்சி அரசாங்கம் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.