உயர் தரமான, இலகுவான மற்றும் சௌகரியமான உணவு உற்பத்திகளை இலங்கையருக்கு வழங்கிவரும் MA’s ட்ரொபிக்கல் ஃபூட் புரொசஸிங்(பிரைவட்) லிமிடெட் நிறுவனம் அதன் பாரம்பரியத்தை தொடர்ந்து பேணும் வகையில் புதிய MA’s கறி பேஸ்ட் தெரிவுகளை சந்தையில் மீள் அறிமுகம் செய்துள்ளது. 

இலங்கை மற்றும் ஏனைய ஆசிய உணவு வகைகளின் சுவை மற்றும் மணம் போன்றவற்றை மீள் உருவாக்கம் செய்யும் குறிக்கோளுடன், புதிய வர்த்தக குறியீடு மற்றும் புதிய பொதியில் மீள் பொதியிடல் செய்யப்பட்டுள்ள இந்த உற்பத்தி தெரிவுகள், சமையலறையில் நமக்கு பிடித்த உணவு வகை தயார்படுத்தல்களை இலகுவாக்குவதுடன், சுவை மாறாது சௌகரியமாகவும், பாதுகாப்பாகவும் உணவுகளை தயாரிப்பதற்கான வசதியை குடும்பங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. 

“முழுமையான உணவு வேளையை விரைவாக தயாரிக்க விரும்பும் பரபரப்பான மக்களுக்கான சிறந்த தீர்வாக, பொருத்தமான சுவை மற்றும் சௌகரியத்துடன் கூடிய தெரிவுகளை நாம் உற்பத்தி செய்துள்ளோம்” என MA’s ஃபூட் புரொசஸிங் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மரியோ டி அல்விஸ் தெரிவித்தார். 

அனைத்து விதமான இயற்கை மூலிகைகள் மற்றும் மசாலாப்பொருட்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கறி பேஸ்ட் தெரிவுகளில் எவ்விதமான செயற்கை சுவையூட்டிகளோ அல்லது செயற்கை நறுமணங்களோ உள்ளடக்கப்பட்டில்லை. 

இந்த தெரிவுகளுள் இலங்கையரின் விருப்பமான உணவு வகைகளான சிக்கன் கறி, மஞ்சள் சோறு மற்றும் அம்புல்தியல் போன்றவற்றுக்கான இலங்கையின் காரமான சிவப்பு குழம்பு (மிரிஸட்ட ஹொத்த) இன் புதிய சேர்க்கைகள், மிளகு மற்றும் மஸ்டர்ட் கறி (பிஸ்டேக் கறி) மற்றும் வீட்டிலேயே டெவில்ட் உணவு வகைகளை இலகுவாக தயாரித்து கொள்ளும் வகையில் அடங்கியுள்ளன. மீள் வடிவமைக்கப்பட்ட ஆசிய தெரிவுகளுள் தாய் ரெட் அன்ட் க்ரீன் குழம்பு, இந்தியன் பிரியாணி, தந்தூரி மற்றும் டிக்கா ஆகியன காணப்படுகின்றன.

“எமது புதிய உற்பத்திகள் நுகர்வோர் தமது சமையலறையில் உணவு வகைகளை தயாரிக்க செலவிடும் நேரத்தை குறைத்து வீட்டில் சமையல் நேரத்தை சாகசமானதாக மாற்றியமைக்கிறது” என மேலும் அல்விஸ் தெரிவித்தார். 

வீட்டுச் சமையலின் தேவைகளுக்கு நிகரற்ற தீர்வுகளை MA’s வழங்குகிறது. உயர் தரத்தை பேணுவதுடன், நிஜமான சமையல்கலை சாகசத்தை உறுதி செய்து இலங்கை நுகர்வோருக்கு புலன் சார் அனுபவத்தையும், உற்பத்தி புத்துருவாக்கத்தையும் மற்றும் சுவை நிபுணத்துவத்தையும் வேறெந்த ஒரு நிறுவனத்தினாலும் வழங்க முடியாது.

Ma’s Kitchen கறி பேஸ்ட் தெரிவுகள் மூலம் வீட்டிலேயே மிக எளிதாக ஆசியாவின் பாரம்பரிய உணவு வகைகளை தயாரித்துக கொள்ள முடியும். மேலும் நுகர்வோருக்கு ஒருசில புதிய சுவைகளை ருசி பார்க்கவும், சமையல்கலை சாகசத்தையும் ஊக்குவிக்கும் வகையில் MA’s அதன் விற்பனை நிலையத்தில் முழுமையான உற்பத்தி தெரிவுகளை வழங்கி வருகிறது.