பெல்­லன்­வில ரஜ­மஹா விகா­ரையின் விகா­ரா­தி­ப­தியும் ஸ்ரீ ஜய­வர்­தனபுர பல்­க­லைக்­க­ழ­கத்தின் வேந்­த­ரு­மான பேரா­சி­ரியர் பெல்­லன்­வில விம­ல­ரத்ன தேரர், சத்­திரசிகிச்­சையின் பின்னர் ஏற்­பட்ட திடீர் மார­டைப்பு கார­ண­மா­கவே உயி­ரி­ழந்­துள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது. 

அவ­ரது சடலம் மீது மேற்­கொள்­ளப்­பட்ட பிரேத பரி­சோ­த­னை­களின் பிர­காரம் இது உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தாக களு­போ­வில வைத்­தி­ய­சா­லையின்  சட்ட வைத்­திய அதி­காரி பி.பீ. தஸ­நா­யக்க தெரி­வித்­துள்ளார்.

 பேரா­சி­ரியர் பெல்­லன்­வில விம­ல­ரத்ன தேரரின் சடலம்  பிரேத பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட போது, அவ­ரது விலா எலும்பு முறிந்­துள்­ளமை  அவ­தா­னிக்­கப்­பட்ட போதும், அது தொடர்பில் செய்­யப்­பட்ட சத்­திரசிகிச்­சையின் பின் அவ­ருக்கு திடீர் மார­டைப்பு ஏற்­பட்டு அதன் கார­ண­மா­கவே அவர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக சட்ட வைத்­திய நட­வ­டிக்­கை­களில் உறு­தி­யா­ன­தாக அவர் மேலும் தெரி­வித்­துள்ளார்.

கடந்த 2 ஆம் திகதி விகா­ரையில் வைத்து, விகாரை யானையின் தாக்­கு­த­லுக்கு உள்­ளா­கி­ய­தாக கூறப்­படும்   பேரா­சி­ரியர் பெல்­லன்­வில விம­ல­ரத்ன தேரர் களு­போ­வில வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு, அங்கு அவ­ருக்கு சத்­திரசிகிச்சை செய்­யப்­பட்­டது. 

அதன் பின்னர் தேரர், தனியார் மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்டார். அங்கு வைத்து தேரர் உயி­ரி­ழந்த நிலையில், மீள களு­போ­வில வைத்­தி­ய­சா­லையில் செய்­யப்­பட்ட சட்ட வைத்­திய  பரி­சோ­த­னை­களின் போதே மர­ணத்­துக்­கான காரணம் தெரி­ய­வந்­துள்­ளது.

காலஞ்­சென்ற பெல்­லன்­வில ரஜ­மகா விகா­ரையின் விகா­ரா­தி­பதி பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரரின் இறுதிச் சடங்குகள் எதிர்வரும்  8 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு பூரண அரச மரியாதையுடன் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெறவுள்ளன.