ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை எனக்கு நீண்­ட­கா­ல­மாக தெரியும். அவ­ரு­டைய மாமனார் ஜனா­தி­பதி ஜய­வர்த்­தன என்னை தனது பொக்­கட்­டுக்குள் போட்­டுக்­கொள்­வ­தற்கு 1977ஆம் ஆண்டு தொடக்கம் கடும்­ முயற்சி எடுத்­தார். அவர் அதில் வெற்­றி­கா­ண­வில்லை. ரணி­லினால் என்னை பொக்­கட்­டுக்குள் போட முடி­யாது. இதனை மஹிந்த ராஜ­பக் ஷ உணர்ந்து கொள்ள வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.

Image result for இரா.சம்­பந்தன் virakesari

1956ஆம் ஆண்டு தொடக்கம் எமது மக்கள் தமக்கு இந்த நாட்டில் என்­ன­வி­த­மான ஆட்சி தேவை­யென்­ப­தனை தொடர்ந்து வந்த தேர்­தல்­களில் வலி­யு­றுத்தி  வந்­துள்­ளார்கள். தற்­போது  நடை­பெறும் ஆட்சி எமது சம்­ம­தத்­துடன் ஏற்­ப­டுத்­தப்­பட்ட ஆட்­சி­யல்ல. அது எம்­மீது வலிந்து திணிக்­கப்­பட்ட ஆட்சி. இந்த ஒழுங்கு தொடர்ந்தும் நீடிக்க முடி­யாது. இது எமது இணக்­கப்­பாட்­டுடன் நடை­பெறும் ஆட்­சி­யல்ல என்றும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

திரு­கோ­ண­மலை கலா­சார மண்­ட­பத்தில் நேற்று முன்­தினம் மாலை நடந்த திரு­கோ­ண­மலை நக­ர­ ச­பைக்­கான வேட்­பா­ளர்­க­ளுக்கு ஆத­ர­வான பிர­தான கூட்­டத்தில் கலந்துகொண்டு பேசும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

தமி­ழ­ர­சுக் ­கட்­சியின் மாவட்­டக் ­கிளைத் தலைவர் சி.தண்­டா­யு­த­பாணி தலை­மையில் நடந்த இக்­கூட்­டத்தில் பார­ாளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன், தமி­ழ­ர­சுக் ­கட்­சியின் தலைவர் மாவை.சேனா­தி­ராஜா, ரெலோ ­கட்­சியின் நக­ர ­சபை வேட்­பாளர்  உள்­ளிட்ட பலரும் இங்கு உரை­யாற்­றினர்.

அவர் ­தொ­டர்ந்தும் சம்­பந்தன் பேசு­கை யில், இன்று இந்த தேர்­தலில் இந்த நாட்டின் அர­சியல் தலை­வர்கள் தீவி­ர­மாக பங்­கு­பற்­றி­யி­ருக்­கின்­றார்கள். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, தமது கட்­சிக்­காக தீவி­ர­மாக பிரசாரம் செய்­கின்றார். அவ்­வாறே ரணில் ­விக்­கி­ர­ம­சிங்­கவும் தமது கட்­சிக்­காக தீவி­ர­மான பிர­சா­ரத்தில் ஈடு­பட்­டுள்ளார். இவ்­வாறே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ­ஷவும் தேர்­த­லுக்­காக பிரசா­ரத்தில் ஈடு­பட்­டுள்ளார். தெற்கில் நடந்த பிர­சாரக் கூட்­டத்தில் மஹிந்த ஒரு கருத்தைக் கூறி­யி­ருந்தார். இந்த உள்­ளூ­ராட்­சி ­மன்­றத்­ தேர்தல் ஒரு­முக்­கி­ய­மான தேர்தல். இதன்­ பின்னர் சில முக்­கி­ய­மான முடி­வுகள் வரலாம். இந்த நாட்டில் ஒற்­றை­யாட்சி தொட­ர­ வேண்­டுமா? அல்­லது தமி­ழீழம் மலர வேண்­டுமா? என்­ற­கேள்­விக்கு பதில் இந்தத் தேர்தல் அளிக்கும் எனக்­கூ­றி­யி­ருந்தார்.

ஒற்­றை­யாட்­சியை நாங்கள் ஏற்­கப்­போ­வதில்லை. அது நிச்­சயம். தமி­ழீ­ழத்தை நாங்கள் எவரும் தற்­போது கேட்­க­வில்லை. 1972 ஆம் ஆண்டு எமது உரி­மை­களை பெறு­வ­தற்கு கடும்­மு­யற்சி எடுத்த பிறகு புதிய அர­சியல் சாசனம் நிறை­வேற்­றப்­பட்­ட­போது அதன்­பின்னர் 1976இல் நாங்கள் தமி­ழீழ பிர­க­ட­னத்தை செய்­தது உண்மை.

அந்த அடிப்­ப­டை­யில்தான் நாங்கள் 1977 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரிவு செய்­யப்­பட்டோம். ஆனால் நாங்கள் தெரிவு செய்­யப்­பட்ட பின்பு சர்­வ­தேச சமூ­கத்தின் கருத்தின் அடிப்­ப­டையில், விசே­ட­மாக பாரதப் பிர­தமர் அன்னை இந்­தி­ரா­காந்தி, அண்ணன் அமிர்­த­லிங்­கத்­திற்கு கூறிய  கருத்தின் அடிப்­ப­டையில். தமி­ழீ­ழத்­திற்­குப் ­ப­தி­லாக நாங்கள் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய ஒரு தீர்வு வரு­மாக இருந்தால் நாங்கள் அதனை ஏற்­றுக்­கொள்­ளத்­தயார் என்று  கூறி­யி­ருந்தோம்.

ஏனெனில் நாட்­டைப்­ பி­ரிப்­ப­தற்கு சர்­வ­தேச சமூ­கத்தின் ஒத்­து­ழைப்பு குறை­வாக இருந்­தது. 1987 ஆடி 29 ஆம் திகதி இலங்கை – இந்­திய ஒப்­பந்­தம் ­கைச்­சாத்­திட்ட பிறகு, 13 ஆவது அர­சியல் சாசனம் உரு­வாக்­கப்­பட்ட பிறகு, அர­சியல் சாசன ரீதி­யாக மாகாண சபை­க­ளுக்கு அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்டு மாகாண சபைகள் உரு­வாக்­கப்­பட்ட பின்பு, தமி­ழீழம் என்ற கோரிக்­கையை நாங்கள் முன்­வைக்கவில்லை. தற்­பொ­ழுதும் நாங் கள் முன்­வைக்­க­வில்லை.

நாங்கள் எதிர்­பார்க்­கின்ற தீர்வு பிரி­ப­டாத, பிரிக்­க­ப்ப­ட­ மு­டி­யாத, ஒரு­மித்த நாட்­டிற்குள், நமது இறை­யாண்­மையின் அடிப்­ப­டையில், நமது உள்­ளக சுய­நிர்­ணய உரி­மையின் அடிப்­ப­டையில், எமது மக்கள் எதிர்­நோக்­கு­கின்ற நாளாந்த கரு­மங்கள் சம்­பந்­த­மாக, எமது தலை­வி­தியை நாங்கள் தீர்­மா­னிக்கும் வகை­யி­லான உரி­மையை சமத்­து­வத்தின் அடிப்­ப­டையில், எமது கௌரவம், எமது சுய மரி­யாதை, எமது பாது­காப்பு, உறுதி செய்­யப்­ப­டும் ­வ­கை­யிலும், எமது அர­சியல் பொரு­ளா­தார, கலா­சார, சமூக, ரீதி­யான உரி­மை­களை நாங்­களே கையா­ளக்­கூ­டிய வகை­யிலும் ஒரு அர­சியல் தீர்வை ஒரு­மித்த நாட்­டிற்குள் நாங்கள் எதிர்­பார்க்­கின்றோம். இதனைப் பாரா­ளு­மன்­றத்­திலும் அதற்கு வெளி­யிலும் மிகவும் தெளி­வாக கூறி வரு­கின்­றோம். இதனை மஹிந்த ராஜ­பக்   ஷவுக்கு தெளி­வாக தெரி­வித்­துக்­கொள்ள விரும்­பு­கின்றேன். அவர் சமீ­பத்தில் இன்­னு­மொரு கருத்தை கூறி­யி­ருக்­கின்றார். அதுவும் யாழ்ப்­பா­ணத்தில் கூறி­யி­ருக்­கின்றார். நான் சமா­தா­ன­மாக பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு முனைந்தேன். அதற்கு தமிழ்­ தே­சி­யக்­ கூட்­ட­மைப்பு ஒத்­து­ழைக்­க­வில்லை. சம்­பந்தன் ஒத்­து­ழைக்­க­வில்லை. சம்­பந்தன் இன்று ரணில் விக்­கி­ரமசிங்­கவின் பொக்­கட்­டுக்குள் உள்ளார் என்றும் கூறி­யி­ருக்­கின்றார்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை எனக்கு நீண்­ட­கா­ல­மாக தெரியும். அவ­ரு­டைய மாமனார் ஜனா­தி­பதி ஜய­வர்த்­தன என்னை தனது பொக்­கட்­டுக்குள் போட்­டுக்­கொள்­வ­தற்கு 1977 ஆம் ஆண்டு தொடக்கம் கடும்­                   மு­யற்சி எடுத்­தார். அவர் அதில் வெற்­றி­கா­ண­வில்லை. அந்­த­வி­டயம் மரு­மகன் ரணி­லுக்கு நன்­றா­கத்­தெ­ரியும். ஆன­ப­டி­யினால் என்னை ரணில் பொக்­கட்­டுக்குள் போட்­டுக்­கொள்ள முடி­யாது என்­பது அவ­ருக்­குப்­பு­ரியும். ஆகவே இதனை மஹிந்த ராஜபக் ஷவுக்கு தெளி­வாக கூறி­வைக்க விரும்­ப­கின்றேன். பாரா­ளு­மன்­றத்­திலும் அவ­ருக்கு நான் தெரி­வித்­தி­ருக்­கின்றேன்.

மஹிந்த ராஜ­பக் ஷ இந்த சமா­தான பேச்­சு­வா­ர்த்தை சம்­பந்­தமாக பல்­வேறு தவ­றான கருத்­துக்­களை கூறி­யி­ருக்­கின்றார். தான் இந்த விட­யத்தில் பல­மு­யற்­சி­களை எடுத்­த­தா­கவும் ஆனால் நாங்கள் ஒத்­து­ழைக்க வில்லை என்ற அடிப்­ப­டையில் பேசி­யி­ருக்­கின்றார்.உண்­மையை மக்கள் அறிந்­து­கொள்ள வேண்டும். அதற்­காக நான் விப­ரத்தை சொல்­ல­ வேண்­டிய கட­மை­யுள்­ளது.

யுத்தம் முடிந்த பிறகு ஐ.நா.வின் செய­லா ளர் நாயகம் இலங்­கைக்கு விஜயம் செய்த பொழுது 2009 வைகாசி மாதம் நிறை­விற்கு பின்னர் மஹிந்த ராஜ­பக்  ஷ ஒரு வாக்­கு­று­தியை அவ­ருக்கு கொடுத்தார். பொறுப்­புக்­கூறல் சம்­பந்­த­மாக நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். ஒரு அர­சியல் தீர்வு ஒரு அர­சியல் சாசனம் ஊடாக ஏற்­ப­டுத்­தப்­படும் என்று சொல்­லி­யி­ருந்தார். அது நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. அது நிறை­வேற்­றப்­ப­டா­மையி னால் இந்­தியா அமெ­ரிக்கா போன்ற நாடு கள் அதனை நிறை­வேற்ற வேண்டும் என்ற கோரிக்­கையை முன்­வைத்­தன.

ராஜ­பக் ஷ இந்­தி­யா­விற்கு அழைக்­கப்­ப ட்டு கலா­நிதி மன்­மோ­கன்சிங் இது சம்­பந்­த­மாக பேசி­யி­ருந்தார். அமெ­ரிக்க இரா­ஜாங்க அமைச்சின் உத­விச்­செ­ய­லாளர் ரொபேட்­பிளேக் இலங்­கைக்கு விஜயம் செய்தார். இதன்­போது அவர் என்னைச் சந்­திக்க வேண்டும் எனக்­கேட்டு அவரை நான் சந்­தித்தேன்.அப்­பொ­ழுது அவர் சொன்னார்  சம்­பந்தன் ஜனா­தி­பதி  ஒரு­நாளும் மாற­மாட்டார். அவரை நேற்று நான் சந்­தித்தேன். அவர் பழைய பாணி­யில்தான் பேசு­கிறார்.  அவர் மாறுவார் என நான் நினைக்­க­வில்லை. எனத்­தெ­ரி­வித்தார். இருந்­தாலும் எமது நிலைப்­பாட்டை நான் தெளி­வு­ப­டுத்­தினேன். அன்று பின்­னேரம் என்னை தொலை­பே­சியில் தொடர்­பு­கொண்ட ராஜ­பக் ஷ நீங்கள் ரொபேட்­ பி­ளேக்கைச் சந்­தித்த­தாக நான்­கேள்­விப்­ப­டு­கின்றேன். என்ன பேசி­னீர்கள் எனக்­கேட்டார். நான் எமது பிரச்­சி­னைகள் பற்றி பல­வி­ட­யங்­களை பேசினேன். அது சுமுக­மாக நடை­பெற்­றது எனத் தெரி­வித் தேன். என்­னை­ நேற்று அவர் சந்­தித்­த­பொ­ழுது அர­சியல் தீர்­வு­பற்றி பேசினார். அர­சியல் தீர்வு எமக்கு கண்­டு­கொள்­ளத்­தெ­ரி யும் உங்­க­ளு­டைய உதவி எங்­க­ளுக்­குத் ­தே­வை­யில்லை எனவும் கூறினேன் எனவும் மஹிந்த எனக்கு தெரி­வித்தார். 

அதன்­பி­றகு தான் அமெ­ரிக்கா ஒரு முடிவு எடுக்க ஆரம்­பித்­தது. இவ­ருக்கு ஒரு பாடம்­ப­டிப்­பிக்க வேண்டும் என நினைத்­தது. 2010 ஆம் ஆண்டு ஐப்­பசி மாதம்  மஹிந்­த­விற்கும் எனக்­கு­மி­டையில் தனிப்­பட்ட சந்­திப்பு ஏற்­பட்­டது. நான் தனியே சந்­திக்க வேண்டும் எனக்­கேட்­ட­தற்­கி­ணங்க அது நடை­பெற்­றது. 

40 நிமி­டங்கள் பல­வி­ட­யங்கள் பற்றி நான் ­பே­சினேன். உங்­க­ளுக்கும் எங்­க­ளுக்­கு­மி­டையில் பேச்­சு­வா­ர்த்­தைகள் இடம்­பெ­ற­வேண்டும். அதற்­கான வாக்­கு­று­தி­களை நீங்கள் கொடுத்­தி­ருக்­கின்­றீர்கள். அர­சியல் தீர்வு சம்­பந்­த­மாக அது நடை­பெ­ற­ வேண்டும் எமது பிரச்­சி­னைக்­காக நிரந்­த­ர­மான தீர்­வு­கா­ணப்­பட வேண்டும் என நான் கூறினேன். அவர் அமை­தி­யாக கேட்டார். இறு­தியில் ஜி.எல்.பீரிஸை அழைத்து அர­சியல் தீர்வு சம்­பந்­த­மாக பேச­வேண்டும் அதற்­கான ஒழுங்­கு­களை செய்­யுங்கள் என்றார். இத­ன­டிப்­ப­டையில் பேச்­சு­வார்த்தை  2012 ஆம் ஆண்டு தை மாதம் ஆரம்­பிக்­கப்­பட்­டது. இது சம்­பந்­த­மாக பாரதப் பிர­தமர் அவ­ரு­ட னும் பேசி­யி­ருந்தார் எங்­க­ளு­டனும் பேசி­யி­ருந்தார்.

இதன்­ ஆ­ரம்­பத்தில் எமது நிலைப்­பாட்டை விளக்­கினோம். ஒரு­மித்த நாட்­டுக்குள் அதி­கா­ரப்­ப­கிர்வு  சம்­பந்­த­மான எல்­லா­வற்­றையும் விளக்­கினோம். எழுத்­து­மூ­ல­மாக எங்­களின் கோரிக்கை­யைக்­ கேட்­டார்கள். அத­ன­டிப்­ப­டையில் அதனை 2012 பங்­குனி மாதம் வழங்­கினோம். அதற்­கான எழுத்­து­மூல பதி­லைத்­த­ர­ வேண்டும் என நாங்கள் கோரினோம். ஆடி­மாதம் வரை கழிந்­தன பதில்­வ­ர­வில்லை. 2012ஓகஸ்ட் 4ஆம் திகதி நாங்கள் நான்கு மாத­மாக உங்­க­ளு­டைய பதி­லைத்­த­ர­வில்லை. நாங்கள் பொறு­மை­யாக காத்­துக்­கொண்­டி­ருக்­கின்றோம். அதற்­கான பதில் இன்று தரா­விட்டால். என்ன முடிவு எடுக்க வேண்டும் என்­ப­தனை நான் எடுப்பேன் எனத்­தெ­ரி­வித்தேன். முடிவில் உங்­க­ளு­டைய பதில் வரும் வரையில் மீள திகதி நிய­மிப்­ப­தனை நான் விரும்ப வில்லை.எனக்­கூறி நாங்கள் வெளி­யே­றினோம். பின்­னர் ­ம­றுநாள் அழைத்து கதைத்­த­போது பதில்­த­ர ­வேண்டும். அர­சாங்­கமும் நாங்­களும் பேசு­கின்றோம். எங்­க­ளது எழுத்­து­மூ­ல­மான விட­யத்­திற்கு அரசு பதில் தர­வேண்டும் என்­ப­தனை மீளவும் வலி­யு­றுத்­தினோம்.

பதில்­த­ர­ மு­டி­யாது. என்னை மன்­னிக்க வேண்டும் எனக்­கூ­றினார். அவ்­வாறு பதில் தரா­விட்டால் கடந்­த ­கா­லங்­களில் பேசப்­பட்ட விட­யங்கள் அதா­வது இந்­திய– இலங்கை ஒப்­பந்தம் உள்ளிட்ட ஆவ­ணங்கள் பேச்­சு­வா­ர்த்தை மேசை க்கு வர­வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தோம். அதனை ஏற்­றுக்­கொண் டார். அதன்­ பின்னர் ஆவணி மாதம் 16 ஆம் ­தி­கதி 2012 ஆம் ­ஆண்டு பேச்­சு­வா­ர்த்தை ஆரம்­ப­மா­னது. 

எந்த விட­யத்­திலும் இணக்­கப்­பாடு இல்லை. பின்னர் பல­முறை சந்தித்தோம். எதுவும் நடை­பெ­ற­வில்லை. இதுதான் உண்­மை­யான நிலைமை. பின்னர் தெரி­வுக்­கு­ழு­வொன்றை அமைத்தார். அதற்கு வரு­மாறு என்­னைக்­ கோ­ரினார். அதற்கு நான் சொன்னேன். நானும் நீங்­களும் பேசி சில முக்­கி­ய­மான விட­யங்­க­ளுக்கு முடிவு காணா­விட்டால் அந்த பேச்­சு­வா­ர்த்­தையில் என்ன பயன் எனக்­கேட்டேன். அங்கு விமல் வீர­வன்­சவை போன்­ற­வர்­களை தூண்டி விட்டு குழப்­பங்­களை ஏற்­ப­டுத்­து­வீர்கள். அதனால் எந்­தப்­ப­யனும் இல்லை என நிரா­க­ரித்தோம்.

பின்னர் ஒரு­முறை அழைத்தார். அங்கு சென்றோம். நின்றவர்கள் என்னை வெரு ட்டும் வகையில் நடந்துகொண்டார்கள்  தெரிவுக்குழுவிற்கு வராவிட்டால் உமக்கு ஆபத்து ஏற்படும் என வெருட்டும்தொனியில்  மஹிந்த எனக்குச் சொன்னார். நான் எனது நிலைப்பாட்டை ஏலவே சொல்லியுள்ளேன். இது விடயமாக நான்மாத்திரம் முடிவு எடுக்க முடியாது. எனது கட்சியின் நிலைப்பாடு இதற்கு ஆதரவாக இல்லை. அதனை மீறி நான்முடிவு எடுக்க முடியாது. அடிப்படை அதிகாரங்கள்  விடயங்கள் தொடர்பாக ஒரு இணக்கப்பாடு வரவேண்டும். இல்லாவிட் டால் நாம் வரமுடியாது. இது தான் உண்மை என்றேன். 1956 ஆம் ஆண்டு தொடக்கம் எமது மக்கள் தமக்கு இந்த நாட்டில் என்னவிதமான ஆட்சி தேவையென்பதனை தொடர்ந்து வந்த தேர்தல்களில் வலியுறுத்தி  வந்துள்ளார்கள். தற்போது  நடைபெறும் ஆட்சியும் எமது சம்மதத்துடன் ஏற்படுத் தப்பட்ட ஆட்சியல்ல. அது எம்மீது வலிந்து திணிக்கப்பட்ட ஆட்சி. இந்த ஒழுங்கு தொடர்ந்தும் நீடிக்கமுடியாது. இது எமது இணக்கப்பாட்டுடன் நடைபெறும் ஆட்சி யல்ல. எமது மக்கள் விரும்பாத எந்த தீர்வையும் நாம் ஏற்கமாட்டோம். இது தான் எமது உறுதியான நிலைப்பாடு. இதற்கு இந்த தேர்தலிலும் மக்கள் தமது நிலைப்பா ட்டை உறுதிசெய்ய வேண்டும் என்றார்.