15 நிமிடங்களில் சம்பள முற்பணம்

By Robert

05 Feb, 2018 | 12:00 PM
image

NDB ஆனது, இப்­போது 15 நிமி­டங்­களில், தொலை­பேசி அழைப்­பொன்றின் ஊடாக சம்­பள முற்­ப­ணத்­தினை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான வழி­ய­மைத்­துக்­கொ­டுக்­கின்­றது. 

 75,000 ரூபா அல்­லது அதற்கு மேல் சம்­பளம் பெற்­றுக்­கொள்ளும் வாடிக்கை­யா­ளர்கள் தற்­போது NDB இன் 24 மணி­நேர அழைப்பு நிலை­யத்­துடன் தொடர்­பு­கொண்டு, 12 மாத மீள்­கொ­டுப்­ப­னவு காலத்­துடன் சம்­பள முற்­ப­ணத்­தினை பெற்­றுக்­கொள்ள முடியும். இந்த சம்­பள முற்­ப­ண­மா­னது இரவு பக­லென எந்த வேளை­யிலும் வைத்­தி­ய­சா­லையில் அனு­மதித்தல், உட­னடிக் கொடுப்­ப­ன­வு­களை மேற்­கொள்ளல் போன்ற அனைத்து அவ­சர பணத்­தே­வை­களையும் நிவர்த்தி செய்யும் வகையில் கிடைக்கும். ஏனைய வங்கி வழங்­கல்­களை போலன்றி வாடிக்­கை­யாளர் பய­ணத்­தினை மேற்­கொள்ளும் வேளை­யிலும் தமது மொபைல் தொலை­பே­சிகள் ஊடாக அழைப்­பதன் மூலம் வங்­கிக்­கிளை ஒன்­றுக்கு விஜயம் செய்ய வேண்­டிய தேவை­யின்றி சிக்­க­லின்­றிய வகையில் பணத்­தினை மீளப்­பெற்­றுக்­கொள்ள வழி­ய­மைத்துக் கொடுப்­பதே Salary Advance இன் முக்­கிய அம்­ச­மாக விளங்­கு­கின்­றது. 

மூன்று மாதங்கள் தமது ஊதி­யத்­தினை தமது Salary Max கணக்கில் வைப்­பீடு செய்யும் அனைத்து Salary Max கணக்கு உரி­மை­யா­ளர்­களும் தமது சம்­ப­ளத்­தொ­கை­யினை கருத்­தில்­ கொள்­ளாது, Salary Max கடன் வச­தி­யினை, Salary Max கணக்கில் வைப்­பிலி­டப்­படும் தமது நிகர சம்­ப­ளத்­திற்கு சம­மான அளவில் பெற்­றுக்­கொள்ள முடியும். 

இதற்கு மேல­தி­க­மாக ட்ரீம் மேக்கர், தனிப்­பட்ட கடன் மற்றும் வியானா இல்லக்கடன் ஆகி­ய­வற்­றினை விருப்­பத்­தெ­ரிவு வட்டி வீதங்­களின் அடிப்­ப­டையில் பெற்­றுக்­கொள்ள முடியும் என்­ப­துடன் பரு­வ­கால அனு­கூ­லங்­க­ளுடன், கட­னட்டை ஒன்றை பெற்­றுக்­கொள்ளும் வச­தியும் Salary Max இல் உள்­ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right