40 வயதை தாண்டிய காதல் நிஜமானது

Published By: Robert

11 Feb, 2016 | 11:27 AM
image

பத்­தி­ரி­கை­யாளர், விளம்­பரப் பட இயக்­குநர், பதிப்­பாளர் என பன்­முகம் கொண்ட எம்.ஆர்.பாரதி, இப்­போது முதல் முறை­யாக ‘அழி­யாத கோலங்கள்’ என்ற படத்தை இயக்கி இருக்­கிறார். அவரது முதல் படம் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்...

இந்தப் படம் பாலு­ம­கேந்­திரா இயக்­கிய ‘அழி­யாத கோலங்கள்’ படத்தின் ரீமேக்கா?

‘அழி­யாத கோலங்கள்’ படத்­துக்கும் இதற்கும் சம்­பந்­த­மில்லை. எங்­க­ளு­டைய குரு பாலு­ம­கேந்­தி­ரா­வுக்கு மரி­யாதை செய்­யவே இந்தத் தலைப்பை வைத்தோம். மற்­ற­படி அவ­ரு­டைய படங்­களை ரீமேக் செய்­வது என் நோக்­க­மல்ல.

இந்தப் படத்தின் கதைக்­களம் என்ன?

கல்­லூ­ரியில் ஒன்­றாகப் படித்த ஒரு ஆணும், பெண்ணும் 24 ஆண்­டுகள் கழித்து மீண்டும் சந்­திக்­கி­றார்கள். அவர்கள் சந்­திக்­கிற ஒரு இரவு எப்­படி இருக்கும் என்­பது தான் இந்தப் படத்தின் கதை. இது வழக்­க­மான கதை அல்ல. நான் 20 ஆண்­டு­க­ளாக இயக்­குநர் ஆவ­தற்கு முயற்சி செய்து வரு­கிறேன். என் நண்­பர்­க­ளோடு அமர்ந்து பல கதை­களை விவா­தித்­தி­ருக்­கிறேன். அவ்­வப்­போது ஒரு கதையை எழு­துவேன். ஆனால், எழுதி முடிக்­கும்­போது அக்­கதை எனக்கே பிடிக்­காமல் போய்­விடும்.

ஏற்­கெ­னவே மற்­ற­வர்கள் செய்த விஷ­யத்­தையே பண்ணக் கூடாது. ஏதா­வது புதி­தாக செய்ய வேண்டும் என்று நினைப்பேன். இறு­தி­யாக நானும் என் நண்பர் அர்ச்­ச­னாவும் ஒரு கதையைப் பற்றி பேசினோம். அக்­கதை தமி­ழுக்கு புது­மை­யாக இருந்­தது. படம் பார்ப்­ப­வர்­க­ளுக்கு ஏற்­கெ­னவே பரிச்­ச­ய­மான கதைக்­க­ளத்தை இப் படம் கண்­டிப்­பாக கொடுக்காது என்­பதால் அதை பட­மாக இயக்­கு­கிறேன்.

40 வயது கடந்த நாய­கி­களை வைத்து படம் எடுக்­கி­றீர்­களே?

40 வயது பெண்­க­ளுக்­கான வாழ்க்கை ஒன்று இருக்­கி­றது. அதைப் பற்றி சொல்­வ­தற்கு படங்கள் எடுக்­கப்­ப­ட­வில்லை. ஆண்­களைப் பொறுத்­த­வரை 50 வயது ஆண்­களை மையப்­ப­டுத்­திக்­கூட படங்கள் வருகின்றன. ஆனால் பெண்கள் விஷ­யத்தில் அவ்­வாறு வரு­வ­தில்லை.

நடுத்­தர வயது பெண்­களின் கதை­களை யாரும் யோசிப்­பதே இல்லை. அவர்­களை ஒன்று அம்­மா­வாக ஆக்­கி ­வி­டு­கி­றார்கள், இல்­லை­யென்றால் அண்ணியாக்­கி ­வி­டு­கி­றார்கள்.

அதை தமிழ் சினி­மாவின் ஒரு குறை­யா­கவே பார்க்­கிறேன். 40 வயது பெண்­க­ளுக்­கான பிரச்­சி­னை­களை அலசும் படங்­களை தொடர்ச்­சி­யாக பண்ண வேண்டும் என்­பதில் நானும், அர்ச்­ச­னாவும் உறு­தி­யாக இருக்­கிறோம். 40 வய­தில்தான் உண்­மை­யான காதல், பாசம் எல்­லாமே சரி­யாக இருக்கும். 40 வயதைத் தாண்­டிய காதல்தான் நிஜ­மான காதல் என்று நான் நம்­பு­கிறேன்.

பாலு­ம­கேந்­தி­ரா­விடம் நீங்கள் பணி­யாற்­ற­வில்லை. இருப்­பினும் அவர் மீதான ஈர்ப்பு வரு­வ­தற்­கான காரணம் என்ன?

மக்களுக்கு நல்ல, தரமான படங்களைக் கொடுத்தவர் பாலுமகேந்திரா சார். அதனாலேயே எனக்கு அவர் மீது ஈர்ப்பு வந்தது. அவரைப் போல நானும் தரமான படங்களை இயக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35