தனக்குத் தானே தீவைத்துக் கொளுத்திக்கொண்ட பெண் மரணமான சம்பவம் அரலகன்விலயில் நேற்று (3) இடம்பெற்றுள்ளது.

சில வருடங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இந்த 72 வயதுப் பெண், நோயின் வேதனை தாங்க முடியாமல் பல்வேறு முறை தற்கொலைக்கு முயன்றதாகத் தெரியவருகிறது.

அவை எவையும் பலிக்காத நிலையிலேயே, நேற்று மாலை சுமார் 5.15 மணியளவில் தனக்குத் தானே தீவைத்துத் தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்த விசாரணையை தெஹியத்தகண்டிய பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.