அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் பிறந்த குழந்தையின் முகத்தை 100 முறை எலியை விட்டு கடிக்க விட்ட கொடூர பெற்றோருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் குடியிருக்கும் இளம் பெற்றோர் பிறந்து 15 நாட்களேயான பிஞ்சு குழந்தையின் முகத்தை எலியை விட்டு கடிக்க விட்டுள்ளனர். 

பெற்றோரின் இந்த கொடூர செயலில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குழந்தையானது பல்வேறுகட்ட அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

தம்பதியினர் குடியிருக்கும் வீட்டில் எலித்தொல்லை அதிகம் என கூறப்படுகிறது. இருப்பினும் குழந்தையை அவர்கள் எலியிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றே தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சமூக ஆர்வலர் ஒருவர் அந்த குடியிருப்பில் சென்று பார்வையிட்டுள்ளார்

அங்கு அவர்கள் கண்ட காட்சிகள் மிகவும் கொடூரமாக இருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  

குழந்தையின் மேலாடைகள் மட்டுமின்றி அறையில் ரத்தக்கறையும் எலிகளின் கால்த்தடமும் பதிந்து காணப்பட்டதாகவும்  அதிர்ச்சி விலகாமல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில்  தம்பதிகளை கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அவர்கள் மீதான குற்றம் நிரூபணமான நிலையில் இருவருக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதுமட்டுமின்றி 304 நாட்களுக்கு பின்னரே இருவருக்கும் பிணை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சையில் இருக்கும் குழந்தையானது இன்னொரு பெற்றோரால் தத்தெடுக்கப்பட்டுள்ளது.