வில்­பத்து வனத்தை அழித்து கட்­ட­டங்கள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள காணி­களை மீண்டும் அர­சாங்கம் கைய­கப்­ப­டுத்த உத்­த­ர­வி­டு­மாறு கோரி தாக்கல் செய்த மனுவை விசா­ரிப்­ப­தற்கு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் தீர்­மா­னித்­துள்­ளது. 

சட்­டத்­த­ரணி நாகா­னந்த கொடி­து­வக்கு உள்­ளிட்ட இரண்டு பேரினால் இந்த மனு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. 

மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்ற தலைமை நீதி­பதி ப்ரீதி­பத்மன் சுர­சேன மற்றும் நீதி­பதி சிரான் குண­ரத்ன ஆகியோர் இந்த உத்­த­ரவை பிறப்­பித்­தனர்.

பாது­காக்­கப்­பட்ட வில்­பத்து வனத்தை அழித்து சட்ட விரோத கட்­ட­டங்கள் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்­ளதால் சூழ­லுக்கு பாரி­ய­ளவு பாதிப்பு ஏற்­பட்­டி­ருப்­ப­தாக மனு­தா­ரர்கள் தமது மனுவில் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். 

இது முற்­றாக சட்­டத்­திற்கு மாறா­னது என்றும் தற்­போது நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள சட்­ட­வி­ரோத கட்­ட­டங்­களை அகற்றி அந்தக் காணி­களை அர­சாங்கம் மீண்டும் கைய­கப்­ப­டுத்த வேண்டும் என்றும் உத்­த­ர­வி­டு­மாறு மனு­தா­ரர்கள் நீதி­மன்­றத்­திடம் கேட்டுக் கொண்­டுள்­ளனர். 

இந்த மனுவை ஆராய்ந்த நீதி­மன்றம் வழக்கை விசா­ரிப்­ப­தற்கு அனு­ம­தித்­துள்­ள­துடன், பிர­தி­வா­தி­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்ள மத்­திய சுற்­றாடல் அதி­கா­ர­சபை, வனப் பாது­காப்பு திணைக்­களம், அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன், முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்‌ஷ உள்ளிட்ட தரப்பினரை எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பியுள்ளது.