இந்­திய மத்­திய அர­சாங்­கத்தின் 2018 ஆம் ஆண்­டுக்­கான வரவு–செலவுத் திட்­டத்தில் இலங்­கைக்கு 150 கோடி ரூபா ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இது கடந்த ஆண்டை விட இரண்டு மடங்­காக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. 

பிர­தமர் நரேந்­திர மோடி தலை­மை­யி­லான அர­சாங்­கத்தின் கடைசி வர­வு­– செ­ல வுத் திட்டம் நேற்று இந்­திய பாராளு­மன்­றத்தில் நிதி­ய­மைச்சர் அருண் ஜெட்லி சமர்ப்­பித்தார். 

இந்த வரவு–செலவு திட்ட உரையின் போது இலங்­கைக்கு 150 கோடி ரூபா ஒதுக்­கப்­ப­டு­வ­தாக அவர் கூறினார். இலங்­கைக்­கான நிதி ஒதுக்­கீடு, கடந்த ஆண்டு 75 கோடி ரூபா­வாக இருந்­த­துடன் அது இம்­முறை இரண்டு மடங்­காக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. 

காங்­கே­சன்­துறை துறை­மு­கத்தின் புன­ர­மைப்பு நட­வ­டிக்­கையும் இந்த நிதி ஒதுக்­கீட்டின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் வெளியிட்டுள்ளன.