பெண்களே ஸிகா வைரஸ் பரவலைத் தடுக்க முஸ்லிம்கள் போன்று ஆடை அணியுங்கள்

By Robert

11 Feb, 2016 | 11:12 AM
image

பிரேசிலில் ஸிகா வைரஸ் வேக மாக பரவி வருகின்ற நிலையில் அந்த வைரஸ் பரவலை தடுக்க அந்நாட்டுப் பெண்கள் முஸ்லிம்கள் அணிவது போன்று உடலை முழுமையாக மூடும் ஆடைகளை அணிய வேண்டும் என அந்நாட்டு மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

ஸிகா வைரஸ் பரவலுக்குக் காரணமான நுளம்புகளின் கடியிலிருந்து

பாதுகாத்துக் கொள்ளும் முகமாகவே மேற்படி ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் வருடாந்த களியாட்ட நிகழ்வின் போது பல்லாயிரக்கணக்கான நடனக் கலைஞர்கள் அரைகுறை ஆடையுடன் ஊர்வலமாகச் செல்வது பிராந்திய அதிகாரிகளின் மத்தியில் கவலையைத் தோற்றுவித்துள்ளது.

இந்த வைரஸ் பரவலிலிருந்து தம்மைப் பாதுகாக்க பெண்கள் மேற்படி ஆடைகளுடன் நீண்ட கைகளையுடைய மேற்சட்டைகள், கையுறைகள், நீண்ட காற்சட்டைகள் மற்றும் காலுறைகளை அணியுமாறு கோரப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right