அநுராதபுரம் மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கை வவுனியா மேல்நீதிமன்றத்துக்கு மீண்டும் மாற்றுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.