ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 15 ஆம் திகதி ஜேர்மன் மற்றும் ஒஸ்ரியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார் .

இதன்போது முக்கியத்துவம் வாய்ந்த இரு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

நேற்று  அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர்  தெரிவித்தார்.