அமெரிக்காவை சேர்ந்த ஒரு காதல் ஜோடி சமீபத்தில் கழிப்பறையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

பிரைன் ஸ்கல்ஸ் மற்றும் மரியா ஸ்கல்ஸ் ஆகிய அமெரிக்க காதல் ஜோடி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

திருமண நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென மணமகன் பிரைனின் தாயார் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிப்பறையில் மூச்சுத்திணறல் காரணமாக கீழே விழுந்துவிட்டதாக தகவல் வெளிவந்துள்ளது.

உடனடியாக அங்கு சென்ற காதல் ஜோடி பின்னர் தாயாரின் உடல்நிலையை கருத்தில்  கொண்டு வேறொரு நாளில் திருமணத்தை வைத்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

ஆனால் நீதிமன்ற அதிகாரிகள் தேவைப்பட்டால் கழிப்பறையிலேயே திருமணம் செய்து வைக்க தாங்கள் தயார் என கூற அதற்கு பிரைனின் தாயாரும் சம்மதிக்க இருவருக்கும் கழிப்பறையிலேயே அதிகாரிகள் திருமணம் செய்து வைத்துள்ளனர்.