(இரோஷா வேலு )

கொழும்பு ஊடகங்கள் சம்பவத்தை திரிபுபடுத்தி செய்தியை நாட்டுக்கு பரப்பியுள்ளன. உண்மையை கண்டறிய பதுளைக்கு வர வேண்டும் என ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தெரிவித்தார். 

முஸ்லிம் சமூகத்தினர் செறிந்து வாழும் பிரதேசத்திலேயே குறித்த தமிழ் பாடசாலை காணப்படுகின்றது. இந்நிலையில் கூடிய புள்ளிகளை எடுத்த முஸ்லிம் மாணவியை பாடசாலையில் சேர்ப்பதற்காகவே நான் சென்றிருந்தேன். இதனை தவறாக அரசியல் நோக்குடன் கையாளப்பட்டமையே பிரச்சினைக்கு காரணம். 

ஒரு மாணவியின் பிரச்சினையை தீர்க்க முடியாதெனில் குறித்த மாகாணத்தில் கல்வி அமைச்சராக நான் இருப்பதில் என்ன பலன் இதனையே மனித உரிமைகள் ஆணைக்குழு முன் தெளிவுப்படுத்தினேன் என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார். 

பதுளை தமிழ் மகளிர் வித்தியாலய அதிபர் பவானி ரகுநதனை முழந்தாளிடச்செய்தமை மற்றும் அவரை பொய்ச்சாட்சி சொல்ல அச்சுறுத்தியமை தொடர்பான விடயங்கள் குறித்து மனித உரிமை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்குவதற்காக ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.