நாட்டின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெப்ரவரி 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை விசேட வாகன போக்குவரத்து திட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு கோட்டை மற்றும் காலி முகத்திடலை அண்மித்த வீதிகளில் குறித்த விசேட வாகன போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அன்றைய தினம் அதிகாலை 5 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை குறித்த போக்குவரத்துத் திட்டம் அமுலில் இருக்குமெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காலிமுகத்திடல் வீதி அன்றைய தினம் முழுமையாக மூடப்பட்டிருக்கும் என்பதுடன் அதனை அண்டியுள்ள வீதிகள் சிலவற்றில் போக்குவரத்து நடவடிக்கை காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணிவரை மட்டுப்படுத்தப்பட்டிருக்குமென பொலிஸார் தெரிவித்தனர்.