இலங்கை மற்றும் இந்தியாவுக்கான துருக்கி தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் கெமால் கஹர்மன் பாதுகாப்பு படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இச் சந்திப்பு பாதுகாப்பு பிரதானியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.

 

துருக்கி தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் கீமெல் கஹர்மன் இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தில் பங்கேற்பதற்காக இங்கு வந்துள்ளநிலையிலேயே இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.


அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மற்றும் கேர்ணல் கெமால் கஹர்மன் ஆகியோருக்கிடையில் பரஸ்பர நலன்கள் குறித்து பேசப்பட்டதுடன் இருவரும் நினைவுச் சின்னங்களைப் பரிமாறிக்கொண்டனர்.

கேர்ணல் கெமால் கஹர்மன் துருக்கி இராணுவத்தின் அனுபவமிக்க இராணுவ அதிகாரி என்பதுடன் அல்பேனியா, ஜோர்ஜியா மற்றும் உக்ரைன் ஆகியநாடுகளில் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் பணியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.