(இராஜதுரை ஹஷான்) 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஒரு மணித்தியாலம் சிறையில் வைக்க முடியுமாயின் கொழும்பில் பாரிய பிரச்சினைகள் தோற்றம் பெறுமென என ராவணா பலய அமைப்பின் பிரதான அமைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ச தேரர் எச்சரிக்கை விடுத்தார்.

30 வருட காலம் இடம்பெற்ற யுத்தத்தினை முடிவிற்கு கொண்டு வந்து நாட்டினை ஒருமைப்படுத்தியவரது குடியுரிமையினை இல்லாதொழிப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் கவனம் செலுத்துவது அரசியல் ரீதியான பழிவாங்கலாகவே காணப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமை இரத்து செய்யப்படவேண்டும் என்றால் பிணைமுறி மோசடிக்காரர்களுக்கு காலி முகத்திடலில் மக்கள் மத்தியில் வைத்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.

கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ராவணா பலய அமைப்பின் பிரதான அமைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ச தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.