நிறுவனம் ஒன்றுக்கு விற்பனைக் கேள்விகளை வழங்கிய அமெரிக்க கடற்படைத் தளபதி அதற்குப் பதிலாக பாலியல் தொழிலாளர்களது சேவை உட்படப் பெரும் பணத்தை இலஞ்சமாகப் பெற்றமை தெரியவந்துள்ளது.

அமெரிக்க முன்னாள் கடற்படைத் தளபதி ட்ரோய் அமண்ட்ஸன் (50) தனது பதவிக் காலமான 2012 முதல் 2013 வரையான காலப் பகுதியில், சிங்கப்பூரின் லெனோர்ட் க்ளென் ஃப்ரான்சிஸ் என்பவருக்குச் சொந்தமான நிறுவனத்தில் இருந்து கடற்படைக்குத் தேவையான பொருட்களை வாங்கியிருக்கிறார்.

இது சட்டபூர்வமானது அல்ல என்றும் அவ்வாறு கொள்வனவு செய்வதற்கு இலஞ்சமாக பெருந்தொகையான பணத்தையும் பாலியல் தொழிலாளிகளின் சேவையையும் பெற்றுக்கொண்டுள்ளார். இதில் ட்ரோய் மட்டுமன்றி, மேலும் பல கடற்படை உயரதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இது குறித்த விசாரணைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.