நாட்டில் ஏற்பட்டிருக்கும் சில்லறை நாணயக் குற்றிகளுக்கான கடுமையான தட்டுப்பாட்டை நீக்க மத்திய வங்கியின் நிதிப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, நாடளாவிய ரீதியில் இயங்கும் வங்கிகளுக்கு இரண்டு, ஐந்து மற்றும் பத்து ரூபாய் பெறுமதியான நாணயக் குற்றிகள் இன்று வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் பெறுமதி சுமார் 20 மில்லியன் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.