இந்தியாவின் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஜல்காம்பாறை எனும் கிராமத்தில் 17 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய  மதபோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விடுதியில் தங்கி கல்வி கற்ற மாணவிக்கு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள அப்துல்லாபுரத்தை சேர்ந்த 47 வயது நிரம்பிய நபர் ஒருவரோடு  பழக்கம் ஏற்பட்டுள்ளது.

குறித்த நபர் ஜலகாம்பாறை அருகே உள்ள மிட்டூர் கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதகராக இருக்கிறார்.

தேவலாயத்திற்கு குறித்த மாணவி சென்ற போது மதபோதகரோடு பழக்கம் ஏற்பட்டு பல இடங்களுக்கு இருவரும் ஒன்றாக சென்றுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம்  மாணவியை சென்னைக்கு அழைத்து வந்த மதபோதகர் திருமணம் செய்து கொள்வதாய் கூறி அப்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார்.

அதன்பின் தன்னை திருமணம் செய்து கொள்ள அந்த சிறுமி வற்புறுத்திய போது, மதபோதகர் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் சம்பவத்தை வெளியே கூறினால் உன்னை கொலை செய்து விடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

இதையடுத்து குறித்த மாணவி பொலிஸ் நிலையம் சென்று தனக்கு நிகழ்ந்தவற்றை கூறி மதபோதகருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸார் தமக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய மதபோதகரை கைது செய்து திவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.