ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்குக் கையளித்தது குறித்து சந்தேகம் கிளப்பியுள்ளார் இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

தமிழகம், ராமநாதபுரத்தில் நேற்று (31) நடைபெற்ற ஒரு அரச நிகழ்வில் கலந்துகொண்டபோதே நிர்மலா சீதாராமன் இந்த சந்தேகத்தைக் கேள்வியாக எழுப்பினார்.

“சீனாவுக்குக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாததால், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு இலங்கை கொடுத்திருக்கிறது. 

“ஆனால், தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் முயற்சியில் ஒரு கட்டமாக இலங்கையை சீனா பயன்படுத்திக்கொள்ளுமா என்று பலருக்கும் சந்தேகம் உண்டு.

“மேற்படி துறைமுகத்தை சீனா துறைமுக நடவடிக்கைகளுக்காக மட்டும் பயன்படுத்திக்கொள்ளும் என்பதை இலங்கையோ, சீனாவோ உறுதிசெய்யுமா? என்பது எனது கேள்வி. எனது கேள்வியே மேலே கேட்கப்பட்ட கேள்விக்கு பதில்!” 

இவ்வாறு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.