(எம்.மனோசித்ரா)
நடைபெறவிருக்கும் உள்ளுாராட்சி சபை தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சிறுவர்களை பயன்படுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உள்ளுாராட்சி சபைகளுக்கான தேர்தல் இம்மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் நாளாந்தம் தேர்தலுடன் தொடர்புடைய பல்வேறு வன்முறை சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. பொதுவான தேர்தல் வன்முறைகள் தொடர்பாக கண்காணிப்பதற்காக பெப்ரல் போன்ற அமைப்புக்கள் செயற்பட்டு வருகின்றன. எனினும் சிறுவர்களை தேர்தல் நடவடிக்கைகளுக்காகவும் பிரசார நடவடிக்கைகளுக்காகவும் பயன்படுத்துகின்றமை தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விஷேட கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு தெரிவித்துள்ளதாவது,
இவ்வாறு தேர்தல் நடவடிக்கைகளுக்காக சிறுவர்களை பயன்படுத்துகின்றமையால் அவர்கள் உடல் மற்றும் உள ரீதியாக பாதிக்கப்படலாம். எனவே இத்தகைய விடயங்கள் தொடர்பாக பொது மக்களுக்கு தெரிந்திருக்கும் பட்சத்தில் 1929 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலம் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அறிவிக்க முடியும்.
இதே வேளை, தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களிடம் சிறுவர்களை தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை முற்றாக தவிர்த்துக் கொள்ளுமாறு கோரப்படுகின்றது. மீறி சிறுவர்கள் பயன்படுத்தப்பட்டால் சிறுவர்களை தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தும் கட்சிகள் அல்லது கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM