கூட்டுப் பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட நால்வருக்கு நாற்பத்தைந்து மற்றும் முப்பத்தைந்து ஆண்டு கால சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்திருக்கிறது அம்பாறை மேல் நீதிமன்றம்!

கடந்த 2013ஆம் ஆண்டு மே மாதம், தெஹியத்தகண்டியில் வைத்து இளைஞர் ஒருவரைத் தாக்கிய பின், அவரது காதலியைக் கடத்திச் சென்றதாகவும் பின்னர் அவரைக் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகவும் சந்தேக நபர்கள் நால்வர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. 

விசாரணைகள் நிறைவுற்ற நிலையில் நேற்று முன்தினம் (30) அம்பாறை நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

அதில், சந்தேக நபர்கள்தாம் குற்றவாளிகள் என்பது சந்தேகமற உறுதி செய்யப்பட்டதாகவும் அதன்படி முதலாவது குற்றவாளிக்கு 45 ஆண்டு கால சிறைத் தண்டனையும் ஏனைய மூவருக்கும் 35 ஆண்டு சிறைத் தண்டனை வழங்குவதாகவும் உத்தரவிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நான்கு குற்றவாளிகளும் தலா 115,000 ரூபாவை அபராதமாகச் செலுத்துமாறும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.